headlines

img

பாஜகவே பாகுபாடு தானே!

“காங்கிரஸ் ஆட்சியின் போது காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என பாகுபாடு பார்த்து திட்டங்கள் வழங்கப்பட்டன; ஆனால் நாங்கள் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பாடுபடுகிறோம். அதற்காகத்தான் கடந்த 10 ஆண்டுகளில் பல லட்சம் கோடி ரூபாயை தமிழ்நாட்டுக்கு கொடுத் திருக்கிறது” என்று புதனன்று பிரதமர் மோடி புதனன்று கோவையில் அண்ணாமலையையும் விஞ்சிடும் வகையில் அள்ளிவிட்டிருக்கிறார்.

பொதுவாகவே பாஜக ஆளும் மாநிலங் களுக்கு அள்ளிக் கொடுப்பதும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு கிள்ளிக் கொடுப்ப தும் தான் ஒன்றிய அரசின் நடைமுறை எதிர்க் கட்சிகள் ஆளும் கர்நாடகாவுக்கு 16 பைசாவும் தமிழ்நாட்டுக்கு 29 பைசாவும் தெலுங்கானா வுக்கு 40 பைசாவும் கேரளாவுக்கு 60 பைசாவும் வழங்கும் ஒன்றிய அரசு பாஜக ஆளும் ம.பி.க்கு  ரூ.1.70, உ.பி.க்கு ரூ.2.20, பீகாருக்கு ரூ.7.26 என்று வாரி வழங்குவது தான் பாகுபாடு இல்லாத பாஜக வின் செயல்பாடா?

கடந்த 10 ஆண்டுகளாக பல லட்சம் கோடி ரூபாயை தந்திருப்பதாகக் கூறும் பிரதமர் மோடி,  அது எவ்வளவு என்றும் எந்தெந்த திட்டங் களுக்கு என்றும் கூறியிருந்தால் நன்றாக இருக்கும். அவர்கள், கொடுத்தால் தானே சொல்வதற்கு! 

தமிழ்நாட்டுக்கு ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு அவரே வந்து அடிக்கல் நாட்டிய திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கி, கட்டி முடிக்கப்பட்டு பயனுக்கு வந்திருக்கிறது என்று சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் பல்வேறு எய்ம்ஸ் மருத்துவமனைகளை கட்டி  பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருப்பது பாகு பாடு இல்லையா? 

சென்னை மெட்ரோ - 2 திட்டத்துக்கு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய பாதித்தொகை ரூ.31,623 கோடி. ஒன்றிய அரசு தந்திருப்பது வெறும் 3,273 கோடி தான். ஆனால்  பாஜக ஆளும் உ.பி.க்கும் (11,565 கோடி), குஜ ராத்துக்கும் (12,167 கோடி) மிக தாராளமாக வழங்கி யிருப்பது தான் பாகுபாடு இல்லாத பாஜக அரசின் நடவடிக்கையோ?

இவை ஒருபுறமிருக்க, புயல் மழை வெள்ளப் பாதிப்புக்கு நிவாரணமாக ரூ.38 ஆயிரம் கோடி தமிழக அரசு கேட்டதற்கு இதுவரை பைசா  காசு கூட வழங்காததும் குஜராத் மாநிலத்துக்கு பிரதமரே நேரில் சென்றதும் ஆயிரம் கோடி ரூபாய் அள்ளிக் கொடுத்ததும் தான் பாகுபாடு இல்லாத பாஜக மாடல் அரசு நிர்வாகமோ?

அரசியல், சமூகம், பொருளாதாரம் என அனைத்திலும் பாகுபாடு பார்ப்பது தானே பாஜகவின் நடைமுறையும் கொள்கையும். ஆனாலும் கூட நாங்கள் அப்படி இல்லை என்று நாவினில் தேனொழுகப் பேசினால் தமிழ்நாட்டு மக்கள் உங்களை நம்பமாட்டார் கள். இத்தகைய பாகுபாட்டு அரசியலுக்கு தமிழ் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.

;