india

img

கர்னால் மற்றொரு சிங்கூ ஆகிறது.... போராட்டக்களத்தில் பல்லாயிரம் விவசாயிகள்....

கர்னால்;
ஹரியானாவின் நிர்வாக தலைமையகமான கர்னாலில் காவல்துறை அடக்குமுறையை மீறி விவசாயிகளின் முற்றுகை இரவு பகலாக தொடர்கிறது. மினி செயலகம் முன்பு பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கூடாரங்களை அமைத்தனர். போராட்டம் தீவிரமடையும் என்று கூட்டு கிசான் மோர்ச்சாவின் தலைவர்கள் தெரிவித்தனர். சிங்கூ மற்றும் திக்ரியில் உள்ளதுபோல் நிரந்தர போராட்டக்களம் கர்னாலில் அமைக்கப்படும் என்று பி.கே.யு தலைவர் ராகேஷ் திகாயத் எச்சரித்துள் ளார்.

விவசாயிகளின் தலையை அடித்து உடைக்க உத்தரவிட்ட எஸ்.டி.எம் ஆயுஷ் சின்ஹாவை பாதுகாக்கும் அரசின் நிலைப்பாடே இந்த போராட்டம் நீடிக்க காரணமானது. விவசாயிகள் போராட்டக்குழு தலைவர்களுடன் காவல் ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பலனில்லை. ஆயுஷ் சின்ஹாவை இடைநீக்கம் செய்து முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை யை ஏற்க அரசு தயாராக இல்லை. கொல்லப்பட்ட விவசாயி சுஷில் காஜலின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க முடியாது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். தடியடியால் கொல்லப்பட்ட தற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் உடற்கூராய்வு எதுவும் நடக்க வில்லை என்றும் அரசு வாதிட்டது. உடற்கூராய்வு நடைபெறாதது அரசாங்கத்தின் தவறு என்றும் சுஷிலின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று தலை வர்கள் தெரிவித்தனர். பிகேயு தலைவர்குர்ணம் சிங் சடுனி மற்றும் அகில இந்திய கிசான் சபா தலைவர் டாக்டர். அசோக் தாவ்லே , நிதி செயலாளர் பி.கிருஷ்ணபிரசாத் ஆகியோர் போராட்டக் காரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

;