india

img

கொரோனாவால் 2 பாஜக எம்எல்ஏக்கள், ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ பலி....

லக்னோ:
கொரோனா பாதிப்பால் உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏக்கள் 2 பேரும்  மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரும் உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேசம், லக்னோ மேற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேஷ் குமார் ஸ்ரீவஸ்தவா(76) என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு லக்னோவில் உள்ள மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்தார். அவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமையன்று உயிரிழந்தார்.அவாரியா சத்தார் தொகுதி பாஜக எம்எல்ஏ ரமேஷ் சந்திர திவாகர் (56) மீரட் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தார். இவரும் சனிக்கிழமையன்று உயிரிழந்தார். இவரது மனைவிக்கும் தொற்று ஏற்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையில் உள்ளார்.மத்தியப்பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டம், ஜோபத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ கலாவதி பூரியா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.  கடந்த 12 நாட்களாக அலிராஜ்பூரில் உள்ள ஷால்பே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் சனிக்கிழமையன்று உயிரிழந்தார்.

படத்தில் இருப்பவர்...  சுரேஷ் குமார் ஸ்ரீவஸ்தவா.... 

;