india

img

எதிர்க்கட்சி வேட்பாளர்களின் மனு தள்ளுபடி

“இந்தியா” கூட்டணியின் எழுச்சியால் தோல்வி பயத்தில் உள்ள பாஜக  பல்வேறு சித்து விளையாட்டு களை அரங்கேற்றி வரும் நிலை யில், குஜராத் மாநிலம் சூரத் மக்க ளவை தொகுதியில் தேர்தல் அதி காரி மூலம் பாஜக வேட்பாளரான முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சி அலையை ஏற் படுத்தியுள்ளது.

சூரத் தொகுதியில் பாஜக  வேட்பாளர் முகேஷ் தலால், காங்கி ரஸ் கட்சியின் நிலேஷ் கும்பானி, பகுஜன் சமாஜ் கட்சியின் பியாரே லால் பாரதி உட்பட 8 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு குளறுபடி காரணமாக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்  தல் அதிகாரி அறிவித்தார். இதனால்  காங்கிரஸ் கட்சி மாற்று வேட்பா ளரை களமிறக்கிய 8 மணிநேரத்திற்  குள், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 8  வேட்பாளர்கள் தங்களது வேட்பு  மனுக்களை வாபஸ் பெற்றுவிட்ட தாகவும் சூரத் மாவட்ட தேர்தல் அதி காரி அறிவித்தார். இதனால் சூரத்  தொகுதிக்கு மே 7 அன்று வாக்குப்  பதிவு நடைபெறும் முன்னரே பாஜக வேட்பாளர் முகேஷ் தலால்  போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டார். 

காங்கிரஸ் கண்டனம்

“இது அப்பட்டமான மேட்ச் பிக்ஸிங். சூரத்தின் சிறு குறு  தொழில் வர்த்தகர்கள் மோடி அர சாங்கம் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால்தான் இத்த கைய அராஜக நடவடிக்கையில் பாஜக இறங்கிவிட்டது” என தனது  டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் காங்கி ரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம்  ரமேஷ் கண்டனம் தெரிவித்துள் ளார்.

;