india

img

“நம்பிக்கை நட்சத்திரம் சலீம்” இந்தியா டுடே இதழ் வர்ணனை

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறாத இடது முன்னணிக்கு, முர்சிதாபாத் தொகுதியில் முகமது சலீம் தாக்கல் செய்துள்ள மனு நம்பிக்கை தருவதாக உள்ளது என்று இந்தியா டுடே இதழ் கூறியுள்ளது. இது குறித்த அந்த இதழில் வெளியாகியுள்ள செய்திக் கட்டுரையின் சில பகுதிகள் வருமாறு: 

2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற  உள்ளாட்சித் தேர்தலின்போது களத்தில் இருந்து கிடைத்த ஆத ரவு இடது முன்னணிக்கு உற்சாகம்  தருவதாக அமைந்தது. முர்சிதா பாத்தில் சலீம் போட்டியிடுகிறார் என்ற செய்தி இடது முன்னணி மற்  றும் காங்கிரஸ் தொண்டர்கள் மற்  றும் ஆதரவாளர்கள் மத்தியில்  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. வேட்பாளராக சலீம் பெயர் அறிவிக்கப்படும் முன்பே, இடது முன்னணித் தொண்டர்கள் தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கி  விட்டார்கள். கடந்த சில மாதங்களா கவே இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத்தின் மாநிலச் செயலாளர் மீனாட்சி முகர்ஜி, இந்தத் தொகுதி யில் கவனம் செலுத்தி வந்தார். 

முர்சிதாபாத் மாவட்டத்தில் முர்சிதாபாத், பெஹ்ராம்பூர் மற் றும் ஜாங்கிபூர் ஆகிய மூன்று முக்கி யமான மக்களவைத் தொகுதிகள்  உள்ளன. இதில் பெஹ்ராம்பூரில் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன்  சவுத்திரி மக்களவை உறுப்பினராக  இருக்கிறார். அவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் 1999 ஆம்  ஆண்டில் இருந்து அவர் உறுப்பின ராக உள்ளார்.

மோசடிகளை மீறி வெற்றி
2023 ஆம் ஆண்டில் நடந்த உள்  ளாட்சித் தேர்தல்களில் இடது முன்  னணி மற்றும் காங்கிரஸ் அணிக்கு, முர்சிதாபாத் மாவட்டத்தில் கணிச மான வெற்றி கிடைத்தது. காங்கி ரஸ் 1,142 கிராம பஞ்சாயத்து வார்டு களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 563 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. மாநிலத்திலேயே இந்த மாவட்டத்தில்தான் அதிகமான வாக்குகளை இந்த அணி பெற் றது. 

மேலும், இந்த மாவட்டத்தில் உள்ள ஜாங்கிபூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சகர்திகி சட்ட மன்றத் தொகுதிக்கான இடைத்தேர்  தல் 2023ல் நடைபெற்றது. இதில் இடது முன்னணியின் ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பா ளர் பேரோன் பிஸ்வாஸ் பெரும்  வெற்றி பெற்றார். இடது முன்னணி  மற்றும் காங்கிரசுக்கு ஆதரவான  முடிவாகவே இது பார்க்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டுத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை, திரிணா முல் காங்கிரஸ் வேட்பாளர் 2 லட்  சத்து 26 ஆயிரத்து 417 வாக்குகள்  வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆனால் 2024ல் நிலைமை மாறி யிருப்பதாகச் சொல்லப்படுகிறது. பாஜகவுக்கு சென்ற இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் பாரம்  பரியமான வாக்குகள் மீண்டும்  வந்துவிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. திரிணாமுல் காங்கிரசின் வாக்கு விழுக்காட்டிலும் சரிவு ஏற்  படும்.

மாவட்ட மக்கள் தொகையில் 66 விழுக்காடு இஸ்லாமியர்களாவர். அவர்கள் மத்தியில் திரிணாமுல்  மீது அதிருப்தி உள்ளது. முன்பு,  இடதுசாரி ஆதரவாளர்கள் காங்கி ரசுக்கு வாக்களித்தனர். ஆனால், காங்கிரஸ் ஆதரவாளர்கள் இடது சாரிகளுக்கு வாக்களிக்காத நிலை  இருந்தது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது. கூட்டணியை அடித் தட்டு வரையிலும் கொண்டு செல்வ தற்கான முயற்சிக்கு முன்னுரிமை தரப்படுகிறது.

இவ்வாறு இந்தியா டுடே செய்திக் கட்டுரையில் எழுதப்பட்டிருக்கிறது.

;