world

img

தீக்கதிர் உலக செய்திகள்

சீனாவுடன் உறவை வலுப்படுத்தும் அஜர்பைஜான் 

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத் திற்கு அஜர்பைஜான் ஆதரவு தருவ தாகவும் அந்நாட்டின்  வளர்ந்து வரும் போக்கு வரத்து துறை இத்திட்டத்திற்கு சிறப்பான பங்களிப்பை தரும் எனவும் அந்நாட்டின் தூதர் எல்ஷாத் இஸ்கந்தரோவ் தெரிவித்துள்ளார். மேலும் மாற்று எரிசக்தி துறையில்  பரஸ்பர ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்ப டையில் அஜர்பைஜானில் 230 மெகாவாட் மின்  உற்பத்தி நிலையங்களை அமைக்க சீனா உறுதி யளித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில்  நீதிபதி கடத்தல்

பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மாவட்ட நீதிபதி கடத்தப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள டேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தின் அருகே  ஷகிருல்லா மர்வாத்  என்ற மாவட்ட நீதிபதி பணி முடித்து திரும்பும் போது ஆயுதத்துடன் வந்த நபரால் கடத்தப் பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த கடத்தலுக்கு இது வரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் கூறப் பட்டுள்ளது.

சவூதி செல்லும்   பிளிங்கன் 

அமெரிக்க வெளியுறவுத் துறை செய லாளர் ஆண்டனி பிளிங்கன் ஏப்ரல் 29 - 30 ஆகிய தேதிகளில்  சவூதி அரேபியா விற்கு செல்கிறார்.  காசாவில் போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்ப தற்கான முயற்சிகள் குறித்து அமெரிக்காவின் நட்பு நாடுகளுடன் விவாதிப்பதற்கான பயணமாக இந்த பயணம் இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. சமீபத்தில் தான் உக்ரைன் மற்றும் இஸ்ரேலுக்கு போரை நிறுத்தாமல் நடத்த 9,400 கோடி டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்க ளை அமெரிக்கா வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

தனி மனித உரிமையை பறிக்கும்  இராக் அரசு

இராக் நாடாளுமன்றம் ஏப்ரல் 27 அன்று தன் பாலின உறவுகளை குற்றமாக்கும் மசோதாவை நிறைவேற்றி உள்ளது. மேலும் தன் பாலின உணர்வின் அடிப்படையில் இணையை தேர்வு செய்தால்  15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.  இந்த நடவடிக்கை ஒவ்வொரு நபரின் தனி மனித உரிமைகளை மீறும் செயல் என மனித உரிமை குழுக்கள் இந்த சட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்திய உணவுப்பொருட்களில்  புற்றுநோய் உருவாக்கும் ரசாயனம் 

ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு  ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி இந்திய உண வுப்பொருட்களில் புற்றுநோய் உருவாக்கும் எத்திலீன் ஆக்சைட் இருப்பது தெரிய வந்துள்ளது. சோதனை செய்யப்பட்ட 2026 மாதிரிகளில், 47 மாதிரிகளில்  எத்திலீன் ஆக்சைட்  அதிகளவு இருந்துள்ளது. அதில் இந்தியா, உகாண்டா லெபனான் உள்ளிட்ட நாடுகளில்  இருந்து இறக்குமதி செய்யப் பட்ட பொருட்களும் அடக்கும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

;