science

img

ஆன்ட்ராய்ட் கைக்கடிகார போன்

சென்னை, ஜன,12- கைகளில் அணியும் கைக்கடி கார தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தம் வகையில் ‘ட்ரீம்’ என்னும் ஆன்ட்ராய்ட் வாட்ச் போனை பயர்போல்ட் என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.  இதன் விலை ரூ.5999 ரூபாய் ஆகும். இந்த கைக்கடி காரங்கள் பிளிப்கார்ட், பயர்போல்ட்.காம் மற்றும் இந்தியா முழுவதும் ஆப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கின்றன.  ஆன்ட்ராய்டு 8.1 இயங்கு தளம் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரின் வசதியுடன், இந்த கைக்கடிகாரம், ஸ்மார்ட்போனின் விரிவான திறன்களை நேர்த்தியான மற்றும் கச்சிதமான ஸ்மார்ட்வாட்ச் வடிவமைப்பாக மாற்று கிறது. இந்த வாட்ச் ஸ்மார்ட்போன் 12 வித வண்ணங்க ளிலும் பலவகையான ஸ்ட்ராப் டிசைனுடன் வெளி வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் வண்ணத்தில் இவற்றை வாங்கலாம் என நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

;