science

img

அறிவியல் கதிர் - ரமணன்

தாவர மரபணு மாற்றம் மூலம் புற்றுநோய் மருந்து

புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் கேம்ப்டோதீஸின் எனும் வேதிப்பொருள் பில்லிபிச்சி(Nothapodytes nimmoniana) என்றழைக்கப்படும் தாவரத்திலிருந்து எடுக்கப்படுகிறது. இந்தப் பொருளை அதிக அளவில் தயா ரிக்கும் விதமாக அந்த தாவரத்தின் செல்களில் மரபணு  மாற்றம் செய்துள்ளார்கள் சென்னை ஐஐடி ஆய்வா ளர்கள். ஐஐடி மண்டியுடன் இணைந்து இந்த ஆய்வு செய்யப்  பட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்கு தேவைப்படும் வேதிப்பொருளில் மூன்றாவது அதிக டிமாண்ட் உள்ள பொருள் கேம்ப்டோதீஸின் ஆகும். ஒரு டன் தயாரிக்க 1000 டன் தாவரப் பொருள் தேவைப்படுகிறதாம். எனவே  அதிக அளவு பயன்பாட்டினால் இந்த தாவரம் அருகி வரும் இனமாகிவிட்டது. மரபணு மாற்றம் மூலம் அதிக அளவிலும் நிலைத்த முறையிலும் குறைவான நேரம் மற்றும் செலவுகளில் இந்த வேதிப் பொருளை தயாரிக்க இயலும். அதே நேரத்தில்  இயற்கை வளங்களையும் பாதுகாக்க முடியும் என்கிறார் இந்த ஆய்வின் முதன்மை பேராசிரியர் சுமிதா ஸ்ரீவத்சா. இதில் பயன்படுத்தப்பட்ட கணக்கியல் மாதிரி முறையில் மேலும் பல உயர் மதிப்புள்ள தாவர வேதிப்பொருட்களை அதிக  அளவில் தயாரிக்க இயலும் என்கிறார் இதன் இணை ஆய்வாளர் பேராசிரியர் கார்த்திக் ராமன். உலகளவில் 2020இல் நடைபெற்ற மரணங்களில் ஒரு கோடி இறப்பு புற்று நோயால் ஏற்படுகிறது என்று உலக சுகா தார அமைப்பு கூறுகிறது. இந்தியாவில் 2025ஆம் ஆண்டுக்  குள் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை 15.7 இலட்சமாக உயரும் என்கிறது இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் ஐசிஎம்ஆர். எனவே புற்றுநோய்க்கான மருந்துகளின் அதிக உற்பத்தியே இந்த நேர தேவை.

ஆதித்யா-எல்1 விண்கலத்தின்  சூரிய கண்காணிப்பு

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆதித்யா-L1 விண்கலத்தை அத னுடய சூரிய கண்காணிப்பு சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்  தும் Halo-Orbit Insertion (HOI)  எனும் இயக்கத்தை வெற்றிகர மாக செய்துள்ளார்கள். அதிலிருக்கும் ஏழு கருவிகள்  சூரியனின் ஒளிவட்டம், நிறவட்டம் மற்றும் அதன் வெளிவட்டமான கொரோனா ஆகிய வற்றை அவதானிக்கும். அந்தக் கருவிகள் மின்காந்த துகள்களையும் காந்தப் புலன் உணர்விகளையும் இணைத்து செயல்படுகின்றன. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாவன- நிறவட்டம் மற்றும் கொரோனா பகுதி களின் புதிர்களை அறிந்துகொள்வது, சூரியனிலிருந்து வெளிப்படும் துகள்களின் இயக்கங்களை புரிந்துகொள்வது, கொரோனாவின் வெப்பம், வேகம், பிளாஸ்மாவின் அடர்த்தி, சூரிய வெடிப்பு நிகழ்வுகளுக்கு காரணமான பல்வேறு அடுக்குகளின் இயக்  கங்களை அடையாளங்காண்பது ஆகியவையாகும்.

வைர மழை பொழிகிறது

ஒரு திரைப்படத்தில் ‘தங்க மழை பெய்ய வேண்டும்’ என்று கவிஞர் பாடினார். தங்க  மழை அல்ல, வைர மழையே பெய்கிறதாம்.  இங்கல்ல; நெப்டியூன், யுரேனஸ் போன்ற கோள் களில். அவற்றின் உள்பகுதி தண்ணீர், மீதேன் மற்றும் அம்மோனியா ஆகியவற்றால் ஆனதாம். ஒரு சோதனையில் அறிவியலாளர்கள் அவற்றின் ஆழ் உட்பகுதியில் காணப்படும் மிகையான வெப்பம்,அழுத்தம் போன்றவற்றை கணினி யில் உருவாக்கினார்கள். அப்போது வைர மழை உருவானதைக் காண முடிந்தது. இதன்  மூலம் பூமியில் நானோ அளவிலான வைரங்களை தயாரிக்கும் முறைகளை உருவாக்க லாம். இந்த வைரங்கள் மருந்தை உட்செலுத்துவது, மருத்துவ உணர்விகள், உட்புகாத அறுவை சிகிச்சை, நிலைத்த உற்பத்தி மற்றும் குவாண்டம் மின்னணுவியல் ஆகிய வற்றில் பயன்பாடு உள்ளது.

வலிக்கு மனோவசிய சிகிச்சை

ஹிப்னாட்டிசம் எனப்படும் மனோவசிய முறை மூலம் பல கோளாறுகளை குறிப்பாக வலி  தொடர்பான நோய்களை குணப்படுத்துவது அறியப்பட்டதே. இப்போது நடத்தப்பட்ட ஒரு  ஆய்வில் இரண்டு நிமிடங்கள் மூளைத் தூண்டுதல் மூலம் ஒரு மணி நேரம் வரை மனோ வசியத்தை அதிகப்படுத்தலாம் எனக் காணப்பட்டுள்ளது. வயது வந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு  நபர்களை மனோவசியப்படுத்தலாம்; அதிலும் 15%பேர் அதிக மனோவசியபடுத்திற்கு ஆட்படு பவர்களாக உள்ளனர் என்கிறார் இந்த ஆய்வின் மூத்த ஆசிரியரும் மனோசிகிச்சை பேராசிரியருமான டேவிட் ஸ்பீகல்.  பேராசிரியர் டேவிட் வலிகளை சமாளிப்பது, அழுத்தங்களை குறைப்பது, புகை பிடித்தலை கை விடுவது இன்னும் பல விசயங்களில் நோயாளிகளுக்கு மனோசிகிச்சையை அளிப்பதிலும் அதில் ஆய்வு  செய்வதிலும் பல ஆண்டுகளைக் செலவிட்ட நிபுணர் ஆவார். அவரது குழு, மூளை பிம்ப பிடிப்பு  முறையின் மூலம் அதிக மனோவசியத்திற்குள்ளாபவர்களின் மூளைப் பகுதிகளிடையே ஆரோக்கிய மான இணைப்புகள் உண்டாகியிருப்பதைக் கண்டறிந்தனர். இவை தகவல்களை பரிசீலனை செய்து  முடிவுகள் எடுக்கும் பகுதிகள் ஆகும். இது மனோவசிய முறையின் நரம்பியல் அடிப்படையை காட்டுகிறது. இந்த சோதனையில் ஒரு பகுதி பங்கேற்பாளர்கள் உண்மையான காந்த தூண்டுதல் கொடுக்கப்பட்டனர். இன்னொரு பகுதியினர் போலியான தூண்டுதல் அளிக்கப்பட்டனர். முதல்  பகுதியினர் இரண்டாவது பிரிவினரைவிட அதிக மனோவசியத்தன்மையை ஒரு மணி நேரத்திற்கு  வெளிப்படுத்தினர். இதன் மூலம் மூளையின் நிலையான இயல்பை சிறிது நேரத்திற்கு மாற்ற முடிந்  துள்ளது. நீண்டகால வலிகளுக்கு ஓப்பியாட் மருந்துகளை அதிக காலத்திற்கு பயன்படுத்துவதற்கு மாற்றாக இந்த சிகிச்சை முறை இருக்கலாம்.

 

 

;