states

img

விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் இணையம்  சேவை துண்டிப்பு

ஹரியாணாவில் விவசாயிகளின் போராட்டத்தையடுத்து  ஒடுக்கும் வகையில் கர்னால் மாவட்டத்தில் இணையம் மற்றும் எஸ்எம்எஸ் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 
ஹரியாணா தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மாதம் 28-ஆம் தேதி கார்ப்பரேட்களுக்கு சாதகமாக மோடி அரசு அமல்படுத்தி உள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு விவசாயிகள் மீது போலீஸாா் நடத்திய தடியடி நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கா்னாலில் உள்ள சிறிய தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்றும் விவசாயிகள் அப்பகுதியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து  கர்னால் மாவட்டத்தில் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையாக இணையம் மற்றும் எஸ்எம்எஸ் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 
முன்னதாக, கா்னாலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

;