states

ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து கவலைப்படும் மக்கள்

கொல்லம், மார்ச் 28-             ஒன்றிய பாஜக அரசுக்கு எதி ரான நிலைப்பாட்டை எடுத்து  வரும் அரசியல் கட்சிகளை ஒடுக்க புலனாய்வு அமைப்புகளை தொடர்ந்து ஒன்றிய பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டிய கேரள முதல்வர் பினராயி விஜயன், நாட்டில் ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து மக்கள்  தீவிரமாக சிந்திக் கின்றனர் என்றும் தெரிவித்தார். கேரளம் மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக குடி மக்கள் பாதுகாப்புக்குழு சார்பில்  மார்ச் 27 புதனன்று பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்று, துவக்கி வைத்துப் பேசியதாவது: 

தில்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும் கவலை தெரிவித்தன. புலனாய்வு அமைப்புகளால் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது இது முதல் முறையும் அல்ல, கடைசி முறை யும் அல்ல. இதுபோன்ற நட வடிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு தொடரவே செய்யும்.

நாடு கண்டிராத மிகப்பெரிய ஊழல் தேர்தல் பத்திரம். கம்யூ னிஸ்ட் கட்சிகள்  தேர்தல் பத்தி ரங்களே வேண்டாம் என்று கூறின.  நாட்டில் ஜனநாயகத்தின் எதிர் காலம் குறித்து பலர் தீவிரமாக சிந்திக்கின்றனர். இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் எதிர் காலத்தைப் பற்றி கவலைப்படு கிறார்கள். எவ்வளவு காலம்  இது நீடிக்கும் என்ற கேள்வியை  மக்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர். நம் நாடு இப்படியே இருக்க முடி யாது என்ற எண்ணம் இந்திய மக்களுக்கு வந்துள்ளது. பணக் காரர்களை மிகப்பெரும் பணக் காரர்களாகவும், ஏழைகளை மிகவும் ஏழைகளாகவும் ஒன்றிய அரசு மாற்றி வருகிறது.

இவ்வாறு முதல்வர் பேசி னார்.

;