states

img

திரிபுராவில் இரண்டாம் கட்டத் தேர்தலிலும் தில்லுமுல்லு; 1,164 வாக்குச்சாவடிகளில் முறைகேடு

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான பாஜக ஆளும் திரிபுராவில் உள்ள 2 மக்  களவை தொகுதிகளுக்கும், காலி யாக இருந்த ராம்நகர் சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் அறிவிக் கப்பட்டது. இந்த 3 தொகுதிகளில்  திரிபுரா மேற்கு மக்களவை தொகு திக்கும், ராம்நகர் சட்டமன்ற தொகு திக்கும் ஏப்ரல் 19 அன்று நடை பெற்ற முதல்கட்டத்தில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

இந்த முதல்கட்ட வாக்குப் பதிவில் “இந்தியா” கூட்டணிக்கு வாக்கு அளிக்கக் கூடாது என்று  பொதுமக்கள் மீதும், வாக்குச் சாவடி முகவர்களாக பணியாற்றக்  கூடாது என இடதுசாரி - காங்கிரஸ்  ஊழியர்கள் மீதும் ஆளும் பாஜக  குண்டர்கள் தாக்குதல் நடத்தியது;  வெளியாட்கள் மூலம் கள்ள ஓட்டு  போட்டது பாஜக. இதனால் மஜ்லிஸ்  பூர், கயார்பூர், மோகன்பூர் உள் ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளில்  உள்ள 4 வாக்குச்சாவடிகளில் வாக்  காளர்களின் மொத்த எண்ணிக்கை யை விட அதிக எண்ணிக்கையில் வாக்குப்பதிவானது. 

இதுபோக ஆதாரமற்ற வெறுப்  புப் பேச்சு மூலம் இடதுசாரி - காங்கி ரஸ் கூட்டணியைப் பற்றி தரக் குறைவான வார்த்தைகள் மூலம்  பாஜகவினர் பிரச்சாரம் மேற் கொண்டனர். இத்தகைய நிகழ்வு களை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் திரிபுரா மாநிலச்  செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி ஆகி யோர் இந்திய தேர்தல் ஆணை யத்திடம் கடிதம் மூலம் மூன்று  முறை புகார் அளித்துள்ளனர். இரண்டு  தொகுதிகளில் மே 7 அன்று மறு வாக்குப்பதிவு நடத்தக் கோரியுள்  ளனர். ஆனால், இந்த கடிதத்திற்கு  இந்திய தேர்தல் ஆணையம் எவ் வித பதிலும் அளிக்கவில்லை.

மீண்டும் தில்லு முல்லு
இந்நிலையில், வெள்ளியன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்  தலில் திரிபுரா கிழக்கு (பழங்குடி) தொகுதிக்கு வாக்குப்பதிவு நடை பெற்றது. முதல்கட்ட வாக்குப்பதி வைப் போன்றே பாஜகவினர் தேர்  தல் விதிகளை மீறி பல்வேறு இடங்  களில் அராஜகச் செயல்களில் ஈடு பட்டனர். தேர்தல் விதிமீறல் தொடர்  பாக “இந்தியா” கூட்டணிக் கட்சி கள் மாநில தேர்தல் ஆணையத் திற்கு 92 புகார்களை ஆதாரத்து டன் கொடுத்தன. 

இந்த புகாரின் அடிப்படை யில் தேர்தல் பணியின் போது பாஜகவிற்கு ஆதரவாக செயல்  பட்ட 2 தலைமை அதிகாரிகள் உட்பட  26 தேர்தல் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்வதாக மாநில தேர்தல் ஆணையம் அறி வித்துள்ளது.

1,164 வாக்குச்சாவடிகளில்
முதல்கட்ட வாக்குப்பதிவை போல திரிபுரா கிழக்கு தொகுதி யிலும், அரசு அதிகாரிகள் உதவி யுடன் முறைகேடு சம்பவங்களை  ஆளும் பாஜக அரங்கேற்றியுள்  ளது. சுமார் 1,164 வாக்குச்சாவடி களில் முறைகேடுகள் நடந்ததாக “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் புகார் அளித்துள்ளன. மேலும்  வாக்குச்சாவடிகளில் வாக்காளர் களுக்கு அடிப்படை வசதி கூட செய்து தரவில்லை என்றும் “இந்  தியா” கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

;