states

img

‘மை’யை மறைக்க மறந்துட்டிங்களேப்பா!

வாக்கு செலுத்தியதற்கான விரலில் கருப்பு மை  அடையாளத்துடன், ‘ஓட்டை காணவில்லை’ என பாஜக ஆதரவாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் பெரும் நகைப்புக்குள்ளானது. நாடாளுமன்றத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவானது தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக கடந்த வெள்ளியன்று  நடைபெற்றது. கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதி யில் 64% வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோயம்புத்தூர் நாடாளு மன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டு இருப்பதாகவும், அது பாஜக ஆதர வாளர்களின் வாக்குகள் தான் என அள்ளி விட்டார். தேர்தல் ஆணையம், தங்கள் கட்சி  ஆட்சி செய்யும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதையும் உணராமல், தனது தோல்விக்கான காரணத்தை தேடுவதற்காக மேற்கண்ட உளறலை வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக, கோவை  மக்களவைத் தொகுதியில் லட்சக்கணக்கா னோரின் வாக்குகள் நீக்கப்பட்டதாக கூறி  பாஜகவினர் வியாழனன்று திடீர் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர். எங்களுக்கும் பாஜக விற்கும் சம்மந்தம் இல்லை என்று கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள் “பாரத் மாதா கி ஜே” என்ற முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் துவங்கி, அதே முழக்கத்துடன் ஆர்ப்பாட்ட த்தை நிறைவு செய்தனர். மேலும், கைகளில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டவர்களில் பெரும்பாலானோர் விரலில் வாக்களித்ததற்கான அடையாளமாய் கருப்பு மை இடப்பட்டிருந்தது.  இதனைப் பார்த்த செய்தியாளர்கள், “இவ்வளவு வேல செஞ்சும் மண்டை மேல இருந்த கொண்டைய மறைக்க மறந்துட்டி ங்களே” என அங்கேயே கலாய்த்தனர்.  தேர்தல் நாளன்று வேட்பாளர் அண்ணாமலையின் தலைமை முகவர் நாகராஜ், ஆட்சியரிடம் ஆயிரக்கணக்கான வாக்குகளை காணவில்லை எனவும், வாக்குகள் இல்லாதவர்கள் அனைவரின் கையொப்பமும் இதில் உள்ளது என புகார் அளித்தார். அந்த புகாரில் வெறும் 43 பேர் மட்டுமே கையெழுத்திட்டிருந்தது அப்போதும் நகைப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

;