states

img

பிஜேபி  பிராடு - நவகவி

ஏழரைநாட்டுச் சனியன்  மோடி ஆட்சி  ஆட்சி!
ஏழரை லட்சம் கோடி ஊழல் சீச்சீ சீச்சீ!
ஊருக்கா ரோடு?- இல்ல
ஊழலுக்கா ரோடு?
சவத்துக்கு வைத்தியம் பாத்து
துட்டடிச்சான் ஃப்ராடு!
            (ஏழரை)

கட்டாத பாலத்துக்கு வரி
வசூலு டோல்கேட் கொள்ள!
காசு மேல ஆசை இல்லையாம்
கத்துறான் யோக்கியன்புள்ள!
அட இது ஆட்சியா? என்ன
ஆடம்ப ரம் பார்த்தையா?
மலை முழுங்கி பிஜேபிக்கு
மறுபடி செங் கோட்டையா?
ரேட்டு.... பேசி ....வரான் ஓட்டு கேட்டு!
ஓட்டு ....ஓட்டு....ஊரை விட்டு ஓட்டு !
                (ஏழரை)

தசரத ராமனுக்கு ஜோரா
கோயில் கட்டும்  படாடோபம்!
தரித்திர ராமருக்குத்தான்
பாடைகட்டுறான் தினந்தோறும்!
கோயில்கட்ட வாங்கிய நிலத்தில்
ஆட்டை போட்டான் பி ஜே பி!
பிதுங்குது தொம்பையாட்டம்
அவன் சட்டைப் பைஜேப்பி!
ரேட்டு...பேசி....வரான் ஓட்டு கேட்டு!
ஓட்டு ...ஓட்டு ....ஊரை விட்டு ஓட்டு!
                (ஏழரை)

டெண்டரில் நாப்பது பர்சென்ட்!
குண்டரில் இவன் நம்பர்ஒன்!
கண்டதில்ல இவனைப் போல
காசு தின்னும் ஊழல் மன்னன்!
பேரு பாரு பி எம் கேரு!
பிக் பாக்கெட் திருட்டு வேல!
ராமனுக்கே அல்வா கொடுத்து
அயோத்தியில் மோசடி லீல!

ரேட்டு... பேசி... வரான் ஓட்டு கேட்டு!
ஓட்டு... ஓட்டு... ஊரை விட்டு ஓட்டு!

;