states

img

மேற்கு ராஜஸ்தானில் வெப்ப அலைக்கான ரெட் அலர்ட்

மேற்கு ராஜஸ்தானில் இன்று மற்றும் நாளை வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. அந்தவகையில் நடப்பாண்டில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 4 முதல் 8 டிகிரி வரை அதிகமாக பதிவாகியுள்ளது. பார்மரில் நேற்று 48 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. '

இதைத்தவிர 7 நகரங்களில் 47 டிகிரிக்கு மேல் வெப்பநிலை கணக்கிடப்பட்டுள்ளது.  ஸ்ரீ கங்காநகரில் 47.3 ஆக வெப்பநிலை இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து பிகானேர் 47.2 ஆகவும், சுரு கிட்டத்தட்ட 47 டிகிரியாகவும், அஜ்மீரில் 45 ஆகவும், உதய்பூர் 44 டிகிரியாகவும் உள்ளது. மேலும் ஜோத்பூர், ஜெய்சால்மர் மற்றும் ஜலோர் ஆகிய இடங்களிலும் கடுமையான வெப்பஅலை வீசியுள்ளது.  

இதையடுத்து மேற்கு ராஜஸ்தானில் இன்று மற்றும் நாளை வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

;