tamilnadu

img

ஆன்லைன் கல்வி -ஆதரவா? அவஸ்தையா?

வெகு சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சப்பை, கருங்கல் ஸ்லைடு,  ஒன்றிரண்டு நோட்டுப் புத்தகங்களுடன்  சிரித்த முகத்து டன் குழந்தைகள் பள்ளிக்கு செல் வார்கள். பள்ளி முடிந்து மாலை நேரத்தில் சிறிது நேரம் வீட்டுப்பா டம் எழுதி விட்டு,  பொதுவெளியில் நண்பர்களுடன் பம்பரம், நொண்டி, பச்சைக்  குதிரை, சைக்கிள் மிதிப் பது போன்ற விளையாட்டுக்கள் என ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால், தற்போது  ஒன்றாம் வகுப்பு படிக் கும் குழந்தை 10க்கும் மேற்பட்ட பாடப் புத்தகங்கள்  தோளில் சுமந்து கொண்டு காலை 8 மணிக்கே வேனில் ஏற்றி விடப்படுகின்றனர்.  

இதன்பின் அக்குழந்தை அணி யும் துணியின் வண்ணம் முதல் மதியம் சாப்பிடுகின்ற உணவு வரை தனியார் பள்ளி  நிறுவனங்களே தீர் மானிக்கின்றது. பள்ளி நேரம் முடிந்த பின்னரும் மாலை நேரத் தில் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித் தனி வகுப்புகள், அதன்பின்னர்  வீட் டுப்பாடம் என அனைத்தும் முடிக் கையில் நள்ளிரவை நெருங்கி விடு கிறது. இதனால் பொதுவெளியில் விளையாட்டு என்பது கேள்விக்கு றியாகி ஆண்ட்ராய்ட் போனில் மூழ்கி விடுகின்றனர். இதன்கார ணமாக குழந்தைகள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி வந்த னர்.  இந்தச் சூழ்நிலையில்தான் கொரோனா வைரசை கட்டுப்ப டுத்த நாடு முழுவதும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது. இத னால் பள்ளி, கல்லூரிகள் காலவரை யின்றி மூடப்பட்டது.இதன் காரண  மாக தனியார் பள்ளி கல்வி நிறுவ வனங்கள் ஆன்லைன் மூலமாக பாடம் நடத்த துவங்கியுள்ளனர். இந்த ஆன்லைன் கல்வி எந்தள விற்கு பயனளித்துள்ளது என அவி நாசியைச் சுற்றிலுள்ள சில பெற் றோர்களிடம் விசாரிக்கையில் கூறி யதாவது, 

புட்டிப்பால் மாதிரி…

எனது குழந்தை ஐந்தாம் வகுப்பு முடித்துவிட்டு, தற்போது ஆறாம் வகுப்பு செல்கின்றார். பள் ளியில் சேர்க்கும் போது  எந்த கடை யில் யூனிபார்ம் துணி தைப்பது என் பது முதல் எந்த உணவு தினசரி கொண்டு வரவேண்டும் என்பது வரை பட்டியல் கொடுத்தனர். இதன் பின்பு என்னிடம் பள்ளி நிர் வாகத்தினர் கேட்ட கேள்வி, ஆண் ட்ராய்டு போன் உள்ளதா? இல்லை என்றால் நீங்கள் ஆண்ட்ராய்டு போன் வாங்க வேண்டும். அதன் மூலமாக வகுப்புகள் நடைபெறும் என்று கூறினார்கள். இதனால் பதி னைந்தாயிரம் ரூபாய் கொடுத்து ஆண்ட்ராய்டு போன் வாங்கி னேன். 

ஆனால், என்னுடைய தனிப் பட்ட கருத்து ஆன்லைன் கல்வி என் பது புட்டிப்பால் மாதிரி, பள்ளிக்கு சென்று வகுப்புகளை கவனித்து படிப்பு என்பது தாய்ப்பால் போன் றது. ஏற்கனவே ஆண்ட்ராய்ட் போன் மூலம்  பல பாதிப்புகள் உண் டாகிறது என்று பரவலாக கூறப்ப டுகிறது. ஆகவே, ஆண்ட்ராய்டு போன் கல்வி கற்பதை தவிர்த்து விட்டு மாற்று வழியைத் தேட வேண் டும் என்கிறார் கே.எஸ்.இளங் கோவன்.

சம்பந்தம் இல்லாத கேள்விகள்

என் மகள் எட்டாம் வகுப்பிலி ருந்து ஒன்பதாம் வகுப்புக்கு செல் கிறார். மகன் ஐந்தாம் வகுப்பிலி ருந்து ஆறாம் வகுப்பு செல்கிறார். இருவருமே தனியார் பள்ளியில் தான் படித்து வருகின்றனர். தற்சம யம் இவர்களுக்கு வகுப்பானது ஆன்லைன் மூலமாகதான் நடக்கி றது. அதாவது வாட்ஸ்அப் மூலம் தான் கேள்வி கேட்கின்றார்கள். இரு வருக்குமே ஒரு சில நேரத்தில்  ஒரே கேள்வியைக் கேட்டு அனுப்புகி றார்கள்.  இந்த வாட்ஸப் மூலம் கேட்கும் கேள்விக்கு, செல்போன் மூலம் டைப் செய்து பதில்களை அனுப்பி விடுகின்றனர். அதே நேரம்,  இவர்கள்  கேட்கும் கேள்விக் கும், பாட புத்தகத்திற்கும் சம்பந் தம் இருக்கிறதா என்பதே தெரிய வில்லை, பள்ளி வகுப்புகள் 3 மாதம் நடைபெறவில்லை, அந்த மூன்று மாதத்திற்குரிய பாடப் புத்தகம் தொடர்பான வகுப்புகள் நடத்தி னால் பயனுள்ளதாக இருக்கும். அதையெல்லாம் விட்டுவிட்டு சம் பந்தம் இல்லாத கேள்விகள் கேட் கின்றனர் என வேதனை தெரி விக்கிறார்  ஆனந்தி.

கவனம் சிதறுகிறது

தனியார் பள்ளிகள்  கட்டண வசூ லிப்பு நோக்கமே ஆன்லைன் கல்வி திட்டமாகும்.  அதேநேரம், மாணவர் கள் மத்தியில் ஆன்லைன் கல்வி யில் பெரிதும் நாட்டமின்மை தெரி கிறது. சிறிது நேரம் மட்டுமே கவ னிக்கிறார்கள், அவர்களை கவ னிக்க வைப்பதற்காகவே பெற் றோர்கள்  யாராவது உடன் இருக்க வேண்டியதாகியுள்ளது. இல்லா விட்டால்  செல்போனில் விளை யாடிக் கொண்டிருக்கிறார்கள். பள் ளியில் மாணவர்கள் கற்கும்போது தனி அறை கவனம் சிதறாமல், பாடத்தை மட்டுமே உற்றுநோக்கி இருப்பார்கள். ஆனால், வீடு என் கிறபோது சுற்றுப்புறச்சூழல் மாறு படுகின்றது. இதனால் படிப்பில் அதிகம் நாட்டம் தெரிவதில்லை. 

பள்ளிக்கூடத்திற்கு போகும் போது குழந்தைகளுக்கு செல் போன் தராதீர்கள் பின்விளை வுகள், பாதிப்புகள் உண்டாகிறது என்று ஆசிரியர்கள் முன்பு கூறி னர். ஆனால், இப்போது செல் போனை கையில் கொடுத்து ஆன் லைன் கல்வியை கட்டாயமாக திணிக்க வேண்டியிருக்கிறது. இத னால் ஒரு சில நேரங்களில் குழந் தைகள் தலை வலிக்கிறது, கண் வலிக்கிறது என்று கூறுகிறார்கள். இதற்கு வேறு வழியை சிந்திக்க வேண்டும் என்கிறார் தேவி.

-அருண், அவிநாசி


 

;