tamilnadu

img

சாத்தான்குளம் படுகொலை: ஐ.நா.சபை கருத்து

ஜெனீவா, ஜூலை 11- தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடை திறந்து வைத்ததாக கூறி காவல்துறையினர் அழைத்துச் சென்று சித்தரவதை  செய்தனர். பின்னர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

தற்போது இந்த வழக்கை, சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு சர்வதேச  அளவில் கவனம் பெற்றுள்ளது. நியூயார்க்கில்  ஐநா தலைமை அலுவகலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ்ஸின் செய்தித் தொடர்பாளர், ஸ்டீபன் துஜாரிக்கிடம் சாத்தான்குளம் சம்பவம் குறித்து  கூறுகையில், “சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் மரணம் தொடர்பாக முறையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.  இதுபோன்ற மரணங்கள்  குறித்த கொள்கைப்படி முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றே ஐ.நா. பொதுச்செயலாளர் விரும்புகிறார்” என்றார்.

;