tamilnadu

img

போடி அருகே காட்டுத் தீயில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 10 லட்சம் நிவாரணம் தருக!

மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை 

தேனி, மார்ச் 26- போடி அருகே தோட்டவேலைக்கு சென்ற தொழிலா ளர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் போது  மேற்கு தொடர்ச்சி மலையில்  காட்டுத் தீயில் சிக்கி இறந்தவர்களின்  குடும்பத்தி ற்கு தலா ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது  குறித்து கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் டி.வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தேனி மாவட்டத்தில் போதிய வேலைவாய்ப்பின்றி பல்லாயிரக்கணக்கான தோட்டத்தொழிலாளர்கள் கேரளா வில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் ஏலம், தேயிலை,காபி தோட்டங்களில் வேலை செய்து வருகிறார்கள். ஆயிரக்க ணக்கானோர் அங்கு தங்கி வேலை செய்து வருகிறார்கள்.கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக கேரளா சாலைகள் மூடப்பட்டது. அதன்காரணமாக தோட்டத்தொழிலா ளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் உள்ளனர். 

இந்நிலையில் சந்தன்பாறை அருகே பேத்தொட்டி பகுதியில் பணிபுரிந்த   போடி  அருகே  ராசிங்காபுரத்தை சேர்ந்த விஜயமணி (46), இவரது மகள் ஜெய்ஸ்ரீ (23), இவரது மகள் கிருஷ்யா (1), கல்பனா (45), மகேஸ்வரி (31, மஞ்சுளா (31), வஜ்ரமணி (40), லோகேஷ் (22), முத்தையா (60) ஆகியோர் ஊர் திரும்ப முடிவெடுத்து  உச்சுலூத்து வழியாக நடந்து வந்துள்ளனர்.  அப்போது அவர்கள்  காட்டு தீயில் சிக்கி யுள்ளனர். இதில்  விஜயமணி, குழந்தை கிருஷ்யா,மகேஸ்வரி, மஞ்சுளா  ஆகியோர் இறந்து போனார்கள் .

வறுமை காரணமாக கேரளாவிற்கு பிழைப்பு தேடி சென்ற நிலையில் 4 பேர் இறப்பு என்பது அவர்களது குடும்பத்தை கடுமையாக பாதிக்கும் .எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவியாக தலா ரூ .10 லட்சம் நிதி வழங்க வேண்டும் .அதுபோல படுகாயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சையும் ,நிவாரணமும் அளித்து ஏழை தொழிலாளர் குடும்பங்களை பாதுகாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன் .இவ்வாறு டி.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.  மேலும் ரேசன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு   மாஸ்க் (முக கவசம்) வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
 

;