tamilnadu

img

கொரோனா சோதனைக்கான தனியார் ஆய்வகங்களின் கட்டணத்தை அரசே ஏற்பு

சென்னை, ஏப்.13- கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு  நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்ப டுத்தும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. இருந்த போதிலும்  வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்ப டுத்த சுகாதாரத் துறை பல்வேறு ஆலோச னைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செய்யலாளர் பீலா  ராஜேஷ்,” தமிழகத்தில்

ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை 8 மருத்துவர்கள் கொரோனா வைர சால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தோற்றால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  10,655  மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப் பட்டுள்ளன 20,40,289 வீடுகள் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் 14 ஆய்வகங்க ளும், 9 தனியார் ஆய்வகங்களும் ஏற்படுத்தப்  பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா சோதனைக்கான தனியார் ஆய்வகங்களின் கட்டணத்தை அரசே ஏற்கும். 14 அரசு மருத்துவமனைகளுக்கும், 9  தனியார் மருத்துவமனைகளுக்கும் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர அனைத்து மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை களிலும் அதனை விரிவு படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்  (ஐசிஎம்ஆர்) பரிந்துரையை ஏற்று 5 மருத்து வமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஐ.வி.ஆர்.எஸ். மூலம் கொரோனா பாதிப்பு அறிகுறி தெரிந்து கொள்ள 94999 12345 எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் 1.5 லட்சம் கர்ப்பிணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவர்களை  கண்காணிக்க ச 5 நபர்களுக்கு ஒரு சிறப்பு  அலுவலர் நியமனம் செய்யப்பட்டு இருப்ப தாகவும் அவர் தெரிவித்தார்.

;