tamilnadu

img

ஊக்கமருந்து பிரச்சனை

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹெல்ஸ் போதை மருந்து பயன்படுத்தியது தொடர்பான சர்ச்சையில் சிக்கினார். சர்ச்சையைத் தொடர்ந்து ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது.ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வியடைந்ததால் 21 நாள் தடை உத்தரவு பெற்றுள்ளார்.உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள (முதற்கட்ட) ஹெல்ஸ் பெற்றுள்ள தடை காலம் 21 நாட்கள் தான் என்பதால், உலகக்கோப்பை தொடரில் எளிதாகக் களமிறங்கிவிடலாம் எனக் கனவு கண்டார். ஆனால் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட்வாரியங்கள் நாட்களை அறி விக்காமல் தடைக்காலத்தை நீட்டித்து ஹெல்ஸின் கனவைக் கானல் நீராக்கியது. இந்நிலையில், உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியின் முதற்கட்ட வீரர்கள் பட்டியலில் இருந்து அலெக்ஸ் ஹெல்ஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

;