tamilnadu

img

மோடிக்கு எதிராக சாட்சி சொன்ன ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை!

அகமதாபாத்:
30 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில், குஜராத்தின் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு, ஜாம் நகர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில், ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர் சஞ்சீவ் பட்.கடந்த 2002-ஆம் ஆண்டு மோடி முதல்வராகஇருந்தபோது, குஜராத்தில் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக பெரும் வன்முறை அரங்கேற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், எரித்தும், வெட்டியும் கொல்லப்பட்டனர். அப்போதும், சஞ்சீவ் பட் முக்கிய அதிகாரியாக பணியாற்றிக் கொண்டு இருந்தார்.அந்த வகையில், குஜராத் வன்முறைகள் குறித்து, சிறப்புப் புலனாய்வுக்குழு, நானாவதி கமிஷன் ஆகிய அமைப்புக் கள், ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிடமும் விசாரணை நடத்தியது. அப்போது, யாருக் கும் அஞ்சாமல் நடந்த உண்மைகளை ஒளிவுமறைவின்றி சஞ்சீவ் பட் கூறினார்.

குஜராத்தில் நடக்கும் வன்முறைகளை, கண்டுகொள்ளாமல் இருக்குமாறு அப்போதைய முதலமைச்சரான நரேந்திர மோடி, காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தில் வெளிப்படையாகவே கூறினார் என்று சஞ்சீவ் பட் பரபரப்பை ஏற்படுத்தினார். வன்முறையை வேடிக்கை மட்டுமே பார்க்கும் வகையில், காவல்துறையினரின் கைகளை மோடி கட்டிப்போட்டு விட்டார் என்றுகுற்றம் சாட்டினார். சிறப்புப் புலனாய்வுக்குழு, நானாவதிகமிஷனில் மட்டுமன்றி, உச்ச நீதிமன்றத்திலும் இதே குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார்.இந்த பின்னணியில், 2015-ஆம் ஆண்டு,சஞ்சீவ் பட்டின் ஐ.பி.எஸ். பதவி பறிக்கப்பட்டது. அத்துடன், கடந்த 2018-ஆம் ஆண்டு சஞ்சீவ் பட், குஜராத் போலீசாரால் திடீரென கைது செய்யப்பட்டார்.அதாவது, சஞ்சீவ் பட், ஜாம் நகர் கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றிய காலத்தில்,கைதி ஒருவர் காவல்நிலையத்தில் இறந்துபோனார். அது தொடர்பான வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்தது; இந்த வழக்கை 30 ஆண்டுகளுக்குப் பின்,மீண்டும் தூசுதட்டி சஞ்சீவ் பட்டை, குஜராத் பாஜக அரசு, கடந்த ஆண்டு கைது செய்தது.இந்த வழக்கில்தான், சஞ்சீவ் பட்-டிற்கு ஜாம் நகர் நீதிமன்றத்தால், தற்போது ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்த்து பிரவீன் சிங் ஜாஹேலே என்ற அதிகாரிக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

;