tamilnadu

img

கோவிட் 19 கொள்ளை நோயைத் தடுக்க ஒன்றுபட்டது கேரளம்

திருவனந்தபுரம், மார்ச் 17-  கோவிட் 19 கொள்ளைநோயை தடுப்பதில் கேரளா ஒன்றுபட்டது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு சிகிச்சையளிப்பதற்கான மாநில அரசின் முடிவின் ஒரு பகுதியாக, சுகாதாரத் துறையும் காவல்துறையும் 35 எல்லை சோதனைச் சாவடிகளில் கூட்டு சோதனைகளைத் தொடங்கியுள்ளன.  மாநில எல்லைக்குள் வரும் தனியார், அரசு, பொதுப்போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்வோருக்கு காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளதா என கேட்டறிகின்றனர். இரண்டு சுகாதாரத்துறை ஊழியர்கள் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கொண்ட பல்வேறு குழுக்களாக பயணித்து இந்த சோதனை நடத்தி வருகின்றனர். ஞாயி றன்று காலை தொடங்கிய இந்த சோதனை எதிர்வரும் நாட்களிலும் தொடர உள்ளது. காசர்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புறம், பாலக்காடு, திரிச்சூர், இடுக்கி, கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்களில் உள்ள மாநில எல்லைகளில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வாகனத்தை யும் நிறுத்தி தெர்மோமீட்டர் மூலம் பயணிகளின் உடல் வெப்பநிலை குறித்து சோதனை நடத்தப்படுகிறது.

39 டிகிரி செல்சியஸுக்கு மேல் உடல் வெப்பம் உள்ளவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். மலையாளிகள் என்றால் அவர்களது விவரங்கள் அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்படுகிறது. பின்னர் செல்பேசியில் தொடர்பு கொண்டு இவர்கள் வீட்டில் அல்லது மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனரா என்பதை உறுதிப்படுத்துகிறார்கள்.  வெளிநாட்டினர் உட்பட அவர்களது கடந்த 15 நாள் பயண விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. விமான நிலையம் செல்வோரின் செல்பேசி எண், வாகனத்தின் பதிவு எண் போன்றவற்றை தனியாக பெறுகின்றனர். விமான நிலையத்திலிருந்து ஆட்களை வரவேற்க செல்கிறவர்களின் எண்க ளும் பெறப்படுகின்றன.  அந்தந்த சோதனை சாவடி பகுதிகளில் உள்ள முக்கிய மருத்துவ மனை மருத்துவர் நோடல் அதிகாரியாக டிஎஸ்பி கண்காணிப்பில் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. நடமாடும் காவல் ஆய்வாளர்கள், சுகாதார ஆய்வா ளர்கள், இந்த ஆய்வுக்கு தலைமை வகித்து வருகின்றனர். விமான நிலை யங்களில் வருவோரை கவனிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அதிகாரியின் சிறப்புக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களிலும் இரவுபகல் என இடைவெளியில்லாத சோதனை நடத்தப்படுகிறது.

;