tamilnadu

img

உலகின் 50 சிறந்த சிந்தனையாளர்களில் கே.கே.சைலஜாவிற்கு முதலிடம்....

திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கொரோனா தடுப்புப் பணிகளில் முன்மாதிரியாகச் செயல்பட்டு, தொற்றைக் கட்டுக்குள் வைத்த மாநில சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜா, உலகின் ஐம்பது சிந்தனையாளர்களில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த “பிராஸ்பெக்ட்” என்ற பத்திரிக்கை வெளியிட்ட இந்த சாதனையாளர்கள் பட்டியலில்நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனைபின்னுக்குத் தள்ளியுள்ளார் ஷைலஜா.உலகின் சிறந்த ஐம்பது சிந்தனையாளர்கள் பட்டியல் மக்களிடம் கேட்கப்பட்டகருத்துக்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகளை முன்னரே உணர்ந்து, அதன் தாக்கங் களை முழுமையாகப் புரிந்துகொண்டார் என்று “பிராஸ்பெக்ட்” பத்திரிகை ஷைலஜாவைப் பாராட்டியுள்ளது.
கொரோனா தொற்று கண்டவர்களை தனிமைப்படுத்தல், கண்காணித்தல், சிகிச்சை அளித்தல் மூலம் அவசரகால நடவடிக்கைகளை எடுத்தவர் என்றும், அரசு அலுவல் சார்ந்த கூட்டங்களைக்கூட சமூகஇடைவெளியுடன் கடைப்பிடித்தவர் என்றும் அந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள் ளது.இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பற்றிக் குறிப்பிட்டுள்ள பிராஸ்பெக்ட் பத்திரிகை, அவரது ஆட்சிமுறையை பாராட்டியுள்ளது.ஐம்பது பேர் பட்டியலில் தத்துவஞானி கார்னல் வெஸ்ட்; அடிமைத்தனத்தின் வரலாற்றாசிரியர் ஆலிவெட் ஓட்டேல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.பிராஸ்பெக்ட் மட்டுமல்ல பிபிசி, திநியூயார்க் டைம்ஸ், தி கார்டியன் உள்ளிட்டபிற சர்வதேச ஊடக அமைப்புகளும்  தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் கேரளா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளன என் பது குறிப்பிடத்தக்கது.

;