tamilnadu

img

கோவிட் 19 நோய் ஒழிப்பு சீனா வெள்ளையறிக்கை

பெய்ஜிங், ஜூன் 8- கோவிட் 19 நோயை ஒழிக்க சீனா எடுத்த நட வடிக்கைகள் பற்றிய வெள்ளையறிக்கையை சீன அமைச்ச ரவையின் தகவல் தொடர்பு அலுவலகம் ஞாயிறன்று வெளியிட்டது. சுமார் 37 ஆயிரம் சொற்களைக் கொண்ட இந்த அறிக்கை யில் 4 முக்கிய பகுதிகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக கொவைட் 19 நோயை ஒழிக்க சீனா எடுத்த நடவடிக்கைகளை யும் எட்டியுள்ள சாதனைகளையும் பற்றி இந்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் 19 நோய் கடந்த 100 ஆண்டுகளில் மனித குலம் சந்தித்திராத மிகப் பெரிய அளவிலான தொற்று நோயாகும். முன்பு கண்டிராத, திடீரென்ற தோன்றிய, மிகக் கடுமை யான தொற்று நோயைச் சந்தித்த சீன அரசு, உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டது என்று இவ்வெள்ளை யறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியும் சீன அரசும் இத்தொற்று நோய் தடுப்பில் உயர்வாக கவனம் செலுத்தின. சீன அரசுத் தலை வர் ஜிஜின்பிங், தடுப்புப் பணிக்குத் தலைமை தாங்கி, பொது மக்களுக்கு மனவுறுதியை அளித்தார் என்று இவ்வறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;