tamilnadu

சோலார் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

ஈரோடு,மே 22-ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்திடம் உள்ள சோலார் அமைப்பின் மூலம் தினமும், 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை மேலும் உயர்த்த ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ்இடையன்காட்டுவலசு மேல்நிலைப்பள்ளி உட்பட இரு பள்ளிகள், அம்மா உணவகம், மாநகராட்சி கட்டடம், காந்திஜி சாலையில் உள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை போன்ற கட்டிடங்களில் சோலார் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ வாட் மின் உற்பத்தி சக்தி கொண்ட சோலார் பேனல் மூலம் தினமும், நான்கு யூனிட்டுக்கும் மேல் மின் உற்பத்தி செய்யலாம். அன்றைய வெயிலின் அளவுக்கு ஏற்ப, இந்த அளவு அதிகமாகும் அல்லது சற்று குறையும். இதன்படிமாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 125 கிலோ வாட் மின் உற்பத்தி அளவுக்கான சக்தி கொண்டசோலார் பேனல் நிறுவப்பட்டுள்ளது.ஒரு கிலோ வாட் உற்பத்தி சக்தி கொண்ட சோலார் பேனல்மூலம் தினமும், நான்கு யூனிட்டுக்கு மேல் மின் உற்பத்தி செய்யலாம் என்ற அளவுப்படி, 125 கிலோவாட் சோலார் பேனல் மூலம், தினமும், 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை, மின்வாரிய கிரிட்டில் வழங்கப்படும். மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளி, அம்மா உணவகம், மகப்பேறு மருத்துவமனை, மாநகராட்சி பிரதான மற்றும் மண்டல அலுவலகம் ஆகியவற்றின் மின்சார செலவில், எங்களது உற்பத்திக்கான மின்சார அளவை நீக்கிவிட்டு, மீதமுள்ள தொகையை செலுத்தி வருகிறோம். இதன் மூலம், ஒவ்வொரு மாதமும் சில ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு குறைந்துள்ளது.சோலார் பேனல் அமைத்துள்ள, பள்ளிகள், அம்மா உணவகம், மகப்பேறு மருத்துவமனை நிர்வாகம் சார்பில், சோலார் பேனலில் படியும் துாசி, பறவைகளின்எச்சம், இலைகள் போன்றவற்றைஅவ்வப்போது சுத்தம் செய்கிறோம். தண்ணீர் மூலம் அவற்றை கழுவி, முழுமையான மின் உற்பத்திக்கு வழி செய்கிறோம். இதனால், தொடர்ந்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது.இதைத்தவிர, ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் மாநகராட்சியின் பிறமண்டல அலுவலகம், கழிப்பறை,பள்ளிகளின் மீது சோலார் பேனல் அமைத்து, மின் உற்பத்தியை அதிகரிக்க திட்ட வரைவுஅனுப்பி உள்ளோம். விரைவில்,அதற்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளோம். அவ்வாறு கிடைக்கும்பட்சத்தில், மாநகராட்சியின் மின்சார செலவு மேலும் குறையும். கடந்தசில ஆண்டுகளுக்கு முன், அரசு துறை மற்றும் பொதுமக்கள், இதுபோன்ற சோலார் அமைப்பை ஏற்படுத்த, மத்திய அரசின் மரபு சாரா எரிசக்தி துறை மூலம், மானியம் வழங்கப்பட்டது. இந்த மானியம் மூலம், கூடுதலாக ஒருமடங்கு அளவுக்கு சோலார் அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். தற்போது,இம்மானியம் நிறுத்தப்பட்டுவிட்டது. முழு தொகையும் தனிநபர் அல்லது மாநகராட்சி நிர்வாகமே ஏற்க வேண்டி உள்ளது. முன்புபோல, சோலார் அமைப்புக்கு மானியம் வழங்கினால், கூடுதல்பேனல்கள் அமைக்க வாய்ப்பாகும் என தெரிவித்தனர்.

;