tamilnadu

கொரோனா தாக்கம்: கோவையில் முழு ஊரடங்கு

கோவை, ஜூலை 24 -  கோவையில் தொடரும் கொரோனா பாதிப்பால் மாவட்டம் முழுவதும் இன்று முதல் திங்கள்கிழமை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்துள்ளார். கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோ ரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, செல்வபுரம் பகுதி கொரோனா பாதிப்புகள் அதி கம் உள்ள பகுதியாக உள்ளது.  

இந்நிலையில் கோவையில் வெள்ளியன்று 12 குழந்தைகள் உட்பட 187 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் அதிக பட்சமாக வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியில் 14 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதேபோல சாரமேடு, சித்தா புதூர், சாய்பாபாகாலணி ஆகிய பகுதிகளில் 7 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கோவை மாவட் டத்தில் தற்போது 2 ஆயிரத்து 964 பேர் தொற்றால் பாதிக் கப்பட்டுள்ளதால் கோவை மாவட்ட மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை  முழு ஊரடங்கை அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.

;