tamilnadu

நீதிமன்ற உத்தரவுப்படி

கோவை, மே 28-கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், தொழில் அதிபர் மார்ட்டின் நிறுவனகாசாளர் பழனிசாமியின் உடல் செவ்வாயன்று மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொழில் அதிபர் மார்ட்டின் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த காசாளர் பழனிசாமி கடந்த 3-ம் தேதிமர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது மரணத்தில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் பழனிசாமியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனஅவரது மகன் ரோகின் குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிமன்றம் (8) மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டது. அதன்படி, கோவை அரசு மருத்துவமனையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த காசாளர் பழனிசாமியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தகோகுல்ராம், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய இரண்டு மருத்துவர்கள் கொண்ட குழுவினர், சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர் சம்பத்குமார் முன்னிலையில் செவ்வாயன்று மறு பிரேதப் பரிசோதனை செய்தனர். மேலும், இந்த உடற்கூறாய்வு முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் 8-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ், பிரேத பரிசோதனை நடைபெறும் மையத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார்.

;