tamilnadu

கோவையில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு

கோவை, மே 28 - கோவையில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி கள் துறையினர் மூலம் ஆயிரத்து 362 இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவின்படி கோவை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினர் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மாவட் டத்தில் பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். இதில் பொதுமக்கள் நட மாட்டம் அதிகம் உள்ள தினசரி மார்க்கெட், மருத் துவமனை மற்றும் கடை வீதிகள் ஆகிய பகுதிக ளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி கடந்த மே 5 ஆம் தேதி முதல் தற்போது வரை மொத்தம்  ஆயிரத்து 362 இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

;