tamilnadu

img

பொதுமுடக்கத்தால் முடங்கிப்போன சிறுமுகை நெசவாளர்கள்

மே.பாளையம், ஜூன் 12- வியக்க வைக்கும் நுணுக்க மான கைத்திறனால் பல முறை மத்திய, மாநில அரசுகளின் சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கான விருதுகளை பெற்ற சிறுமுகை பகுதி நெசவாளர்கள் தற்போதைய தொழில் முடக்கத்தால் கடுமை யாக பாதிக்கப்பட்டு வறுமை யில் தவிக்கும் பரிதாப சூழல் ஏற் பட்டுள்ளது.  

கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தை அடுத்துள்ள சிறு முகை என்னும் பகுதியில் கைத்தறி நெசவே பிரதான தொழிலாக உள் ளது. இங்கு,  ஆயிரத்திற்கும் மேற் பட்ட குடும்பங்கள் கைத்தறி தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். பட்டுப்புடவை என்றாலே விலை உயர்ந்தது, அவற்றை அணிவதும், பராமரிப்ப தும் சிரமமானது என்ற நிலையை போக்கி, விலை குறைந்த அதே நேரத்தில் அதிக எடையில்லா கைத்தறி மென்பட்டு புடவை களை அறிமுகப்படுத்தியவர்கள் சிறுமுகை பகுதி நெசவாளர்களே. கலைநயத்துடன் இவர்கள் நெய் யும் மென்பட்டு மற்றும் கோரா காட்டன் ரக சேலைகள் நாடு முழுவ தும் பிரசித்தி பெற்றவை.

மேலும், திருவள்ளுவரின் உருவத்துடன் அவரது 1330 குறள்களையும் புட வையில் நெய்தது, உலக அதிசயங் கள் மற்றும் புராதான சின்னங்கள், தேச தலைவர்களை தத்ரூபமாக சேலைகளில் நெய்தது என மூன்று முறை மத்திய, மாநில அரசுகளின் விருதுகளை இப்பகுதி நெசவாளர் கள் வென்றுள்ளது இவர்களது திற மைக்கான சான்று. உலகளவில் சிறுமுகை பட்டு தனி கவனம் பெற்றது. இப்படி திற மையும், பெருமையும் மிக்க இப்ப குதி கைத்தறி நெசவாளர்கள் கொரோனா முடக்கத்தால் பெரும் துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இங்கு தயாராகும் கைத்தறி பட் டுப்புடவைகள் பெண்கள் மத்தி யில் பெரும் வரவேற்பை பெற்று ள்ளதால், இந்தியா முழுவதும் உள்ள கோ ஆப்டெக்ஸ் கடைகள் மூலம் கூட்டுறவு சங்கங்களால் விற்பனை செய்யப்படுவதோடு, தனியார் நிறுவனங்களும் வாங்கி செல்லும் அளவிற்கு பெயர் பெற் றவை. ஆனால், தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நடைமுறையி லுள்ள கொரோனா பொது முடக் கம் இவர்களை முற்றிலுமாக முடக்கி போட்டுவிட்டது. தற் போது சில தளர்வுகள் அறிவிக்க பட்டாலும், சேலைகளை நெய்ய பயன்படுத்தக்கூடிய பட்டு கர்நாட காவில் இருந்தும் ஜரிகை வகை கள் சூரத்தில் இருந்தும் வரவேண் டும். ஆனால், போக்குவரத்து சிக் கல் நீடிப்பதால் இவை வருவ தில்லை.

மேலும் ஏற்கனவே தயா ரிக்கப்பட்ட ரூ.15 கோடி மதிப்பி லான மென்பட்டு மற்றும் கோரா காட்டன் புடவை ரகங்கள் தேக்க மடைந்து விட்டதால் இனி இவர் கள் நெய்வதிலும் பலனில்லை. வீட்டில் உள்ள ஆண் மற்றும் பெண் என குடும்பத்துடன் சேர்ந்து நெய் தால் ஒரு புடவையை உருவாக்க மூன்று நாட்களாகும். ஒரு புட வைக்கு ரூ.1,500 கூலி என்ற நிலை யில் விடுமுறையின்றி விடாமல் உழைத்தால் மட்டுமே மாதத் திற்கு பத்து புடவைகளை நெய்ய இயலும்.  இந்நிலையில், வேலையின்றி இருமாதங்களுக்கும் மேலாக நெசவாளர்களின் இல்லங்களில் உள்ள தறிகள் இயக்கப்படாமல் மௌனம் காப்பதால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வறுமை யில் தவிக்கின்றனர் சிறுமுகை பகுதி கைத்தறி நெசவாளர்கள். நெய்தல் தவிர வேறு தொழில் தெரி யாத இவர்கள் அன்றாட வாழ் விற்கு கூட வழியின்றி வேதனை யில் மூழ்கியுள்ளனர்.

கொரோனா பொது முடக்கதால் பாதிக்கப்பட் டுள்ள நெசவாளர்களுக்கு அர சால் அறிவிக்கப்பட்ட ரூ.2 ஆயி ரம் நிவாரண தொகை இங்குள்ள 10 சதவிகித நெசவாளர்களுக்கே இதுவரை சென்றந்துள்ளது. மீத முள்ள 90 சதவிகிதம் பேர் இதற் காக காத்துக்கிடக்கும் நிலை நீடிக் கின்றது. ஏற்கனவே, நலிவ டைந்து வரும் கைத்தறி தொழில் இந்த ஊரடங்கால் முற்றிலும் பாதிப்படைந்துள்ளதாக வேதனை தெரிவிக்கும் நெசவாளர் கள், நம் நாட்டின் பாரம்பரிய தொழிலை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண் டும் என்றும் கோரிக்கை விடுத்துள் ளனர்.

;