tamilnadu

திப்புவின் வாரிசுகளுக்கு ... 1ஆம் பக்கத் தொடர்ச்சி

இந்திய மக்களை செல்லாதமக்களாக மாற்ற துடித்துக்கொண்டிருக்கிறார்கள். இதனை ஒருபோதும் இந்திய நாட்டின் ஜனநாயக இயக்கங்கள் ஏற்காது.நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியதாக பாஜகவினர் தம்பட்டம்அடித்தது. இந்த குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக முதன்முதலில் ஒலித்த கேரள மாநிலத்தில் இடதுசாரிகள் ஆட்சி செய்யும் முதல்வர்பினராயி விஜயனின் குரல். இப்போதுஇந்தியாவில் உள்ள 13 மாநிலங்கள் இந்த சட்டத்தை ஏற்கமாட்டோம் என வெளிப்படையாக அறிவித்துள்ளன. இதனையும் மீறி எப்படி உங்களால் இதனை நடைமுறைப்படுத்த முடியும்.

என்பிஆர் மூலம் கணக்கெடுத்துவிட்டு அதனை என்சிஆருக்கு பயன்படுத்தலாம் என கணக்கு போட்டதுமோடி அரசு. ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநிலத்தில்உள்ள அரசு ஊழியர்களை கொண்டுதானே எடுப்பீர்கள். எங்கள் மாநிலத்தில் எந்த ஒரு அரசு ஊழியரும் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட மாட்டார்கள் என பகிங்கரமாக அறிவித்தவர் பினராயி விஜயன். இதுமட்டுமல்லாமல் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி என்பிஆர் கணக்கெடுப்பை புறக்கணிக்க வேண்டுகோள் விடுத்தவர். இந்தியாவில் 13 மாநிலங்கள் இந்த சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை உறுதியாக மேற்கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள எடப்பாடி தலைமையிலான அரசு இச்சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லைஎன்கிறது. நாங்கள் சொல்கிறோம் இது எடப்பாடியின் குரல் அல்ல. இது சங்பரிவாரின் குரல், ஆர்எஸ்எசின்குரல் என்று குற்றம்சாட்டுகிறோம். 

தில்லியில் நடைபெறும் ஷகின்பாக் போராட்டத்தின் தொடர்ச்சியாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஷாகின்பாக் போராட்டங்கள் எழுச்சியோடு துவங்கியிருக்கின்றன. இதன் ஒருபகுதியாகத்தான் கோவையிலும் இந்த போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்திய வரலாற்றில் இத்தகைய போராட்டம் நடைபெற்றதில்லை. பல நாட்கள் தேசம் தழுவிய அளவில் இந்த போராட்டம் தொடர்கிறது என்றால் அது மோ டி அரசின் நாசகர குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரானஇந்த போராட்டம்தான். இந்தப் போராட்டத்திற்கு புதியசக்திகள் இணைந்து கொண்டிருக்கிறார்கள். நாளுக்கு நாள் இந்த போராட்டங்கள் வலுமிக்கதாக மாறி வருகிறது. இப்போதுமோடி, அமித்ஷா வகையறாக்களுக்கு இரவில் தூக்கம்வருவதில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கின்றனர். இஸ்லாமியர்கள் தனித்து இல்லை. இடதுசாரிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் முழுமையாக உடன் நிற்கிறோம். ஜனநாயக இயக்கங்கள், மதச்சார்பற்ற இயக்கங்கள் இப்போராட்டத்தில் இணைகிறார்கள். இச்சட்டத்தை தூக்கி வங்காள விரிகுடா கடலில் வீசும்வரை நமது போராட்டம் ஓயப்போவதில்லை. மேலும் இப்போராட்டத்தை விரிவுபடுத்துவோம் என்றார். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தலைவர்கள் கரம் குலுக்கி ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

;