tamilnadu

img

பாஜக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் சிபிஐ ஆர்ப்பாட்டம்....

சென்னை:
மத்திய பாஜக அரசின் வஞ்சகப் போக்கை கண் டித்து தமிழ்நாடு முழுவதும் 2000க்கும் மேற்பட்ட மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் உதவாமல், மாநிலத்தை வஞ்சிக்கும் போக்கில் தீவிரமாக செயல் படுகிறது.கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்புக்கு பேரிடர் நிதியுதவி செய்யாமலும், தடுப்பூசி மருந்துகள், மருத்துவ ஆக்சிஜன், வெண் டிலேட்டர் போன்றவைகளை தமிழ்நாட்டிற்கு நியாயமான அளவில் ஒதுக்காமல் மக்கள் நலனை புறக்கணித்து வருகிறது.

இந்த நெருக்கடியான நேரத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளைகளின் விலைகளை உயர்த்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் வழிப்பறிக் கொள் ளைக்கு பாஜக அரசு ஆதரவாக செயல்படுகிறது.மறுபக்கம் மத்திய - மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும் கலால் வரியை குறைத்து, மாநிலங்களின் நிதியாதாரத்தை அபகரித்து வருகிறது.நீட் தேர்வு உள்ளிட்ட நுழைவு மற்றும் திறன் தேர்வுகள் நடத்தியும், புதிய கல்விக் கொள்கையின் பெயரிலும் மாநில மக்களின் கல்வி உரிமையை பறித்து வருகிறது.

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்தும், மக்கள் நலன் சார்ந்த கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மே 8 அன்று தமிழகம் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட மையங் களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.தலை நகர் சென்னையில், கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் கட்சியின் மாநில தலைமை அலுவலக வளாகத்தில்  கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

கொரோனா நிதி...
கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பல்வேறு தனியார் அமைப்புகள், நிறுவனங்கள் அரசுக்கு நிதியுதவியும் செய்து வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு வேட் டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கொரோனா நிதியாக ரூ.10000 பால்வளத் துறை அமைச்சர் மு.நாசரிடம் சங் கத்தின் மாநில பொதுச் செயலாளர் கங்காதுரை வழங்கினார். திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் ராஜன், தாமோதரன், டில்லி, கண்ணாயிரம், ரமேஷ், பாபு  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;