tamilnadu

img

ஜனநாயகக் கடமையாற்றிய தலைவர்கள்

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, சென்னை அடையாறு காமராஜர் அவென்யூவில் அமைந்துள்ள சென்னை உயர் நிலைப் பள்ளி வாக்குச் சாவடியிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள அங்கனூர் அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச் சாவடியிலும் வாக்களித்தனர்.

திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகா உடன் தேனாம்பேட்டை எஸ்ஐடிஇ கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியிலும், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி தொகுதி வேட்பாள ருமான கனிமொழி மயிலாப்பூரில் உள்ள வாக்குச் சாவடியிலும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர்.

திமுக பொருளாளரும், திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான டி.ஆர்.பாலு, கோடம்பாக்கம் பாத்திமா மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடியிலும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் ஆகியோர் மதுரை காக்கைபாடினியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியிலும் வாக்களித்தனர்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, திருபெரும்புதூர் தொகுதி மணிமங்கலத்திலும், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் கொக்கராயன் பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் 279-ஆவது வாக்குச் சாவடியிலும், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா அரும்பாக்கத்திலும் தமது வாக்குகளை செலுத்தினர்.

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை கோயம்பேடு அருகில் நெற்குன்றம் எம்.ஆர். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கைப் பதிவு  செய்தார்.

சிபிஎம் - சிபிஐ தலைவர்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் தியாகராயர் நகர்  ராமகிருஷ்ணா பள்ளியிலும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பால கிருஷ்ணன் சிதம்பரத்தில் மானா சந்து நக ராட்சி நடுநிலைப் பள்ளியிலும் வாக்களித்தனர்.

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் ஆதம்பாக்கம் புனித  மாற்கு மேல்நிலைப் பள்ளியிலும், மத்தியக்குழு உறுப்பினர்கள்- ஏ.கே. பத்மநாபன் கொளத்தூர் பெரியார் நகர் சாமுதாரியா காலனியில் உள்ள மேரியோ நர்சரி தொடக்கப்பள்ளியிலும், உ. வாசுகி, நீலாங்கரையில் உள்ள சன்பீம் பள்ளி வாக்குச்சாவடியிலும், பெ. சண்முகம் ஆவடி கோயில்பதாகையில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியிலும் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, நந்தனம் அரசுப்  பள்ளி வாக்குச்சாவடியிலும், தேசியப் பொதுச் செயலாளர் து. ராஜா தியாகராயர் நகர் தக்கர் பாபா வித்யாலயா பள்ளியிலும், மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், திருத்துறைப் பூண்டி, வேளூர் தொடக்கப் பள்ளியிலும் வாக்களித்தனர்.

இடதுசாரி வேட்பாளர்கள்
‘இந்தியா’ கூட்டணியின் மதுரை மக்க ளவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசன், திருப்பரங் குன்றம் ஹார்விபட்டி வாக்குச் சாவடியிலும், திண்டுக்கல் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர். சச்சிதானந்தம் ரெட்டியார் சத்திரம் ராமலிங்கம்பட்டி வாக்குச் சாவடியிலும் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

‘இந்தியா’ கூட்டணியின் திருப்பூர் நாடாளு மன்றத் தொகுதி சிபிஐ வேட்பாளர் கே. சுப்ப ராயன் பத்மாவதிபுரம் மாநகராட்சி பள்ளி வாக்குச் சாவடியிலும், நாகப்பட்டினம் தொகுதி சிபிஐ வேட்பாளர் வை. செல்வராஜ், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம், சவளக்காரன் ஊராட்சி, அரசூர் வாக்குச்சாவடி மையத்திலும் வாக்களித்தனர்.

சபாநாயகர்
நெல்லை பெரியநாயகி புறத்தில் உள்ள  வாக்குச்சாவடியில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வாக்கு செலுத்தினார். சட்டப்பே ரவைத் தலைவர் கு. பிச்சாண்டி திருவண்ணா மலையில் தனது வாக்கை பதிவு செய்தார்.

காதர் மொகிதீன்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் திருச்சி காஜாமியான் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாக்களித்தார்.

எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் எடப்பாடி நெடுங்குளம் ஊராட்சி, சிலுவம்பாளையம் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலா ளர் எடப்பாடி பழனிசாமி, தேனி பெரியகுளத் தில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள்  முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், திண்டி வனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாக்களித்தனர்.

முதல் ஆளாக வந்த அஜித்..!
திரைப்பட கலைஞர்களில், நடிகர் அஜித், வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 15 நிமி டங்கள் முன்பாக சென்னை திருவான்மி யூர் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் காத்திருந்து வாக்கு செலுத்தினார். அதே போல், சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரி வாக்குச்சாவடியில் ரஜினிகாந்த், பிரபு, சரத்குமார், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, யோகிபாபு, லாரன்ஸ், அர விந்த்சாமி, பிரசன்னா, ஜெயம் ரவி, விஷால், இயக்குநர் சங்கர், கருணாகரன், நடிகைகள் ஆர். ராதிகா, திரிஷா, ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பலரும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

;