tamilnadu

img

விளையாட்டில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியில் இலவச படிப்பு

திருவள்ளூர், ஏப்.22- கபடி விளையாட்டில் மாவட்ட, மாநில அளவில் சிறப்பாக செயல்பட்ட டி.ஜே.எஸ் மெட்ரிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த 3மாணவர்களுக்கு கல்லூரியில் இலவச மேற் படிப்பிற்கான ஆணையை பெற்றுள்ளனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் பகுதியில் உள்ள டி.ஜே.எஸ் மெட்ரிக் பள்ளியின் மாணவர்கள் எம்.முகிலன், எஸ்.ராகேஷ், எஸ்.கோகுலகிருஷ்ணன். ஆகிய மூவரும் நடந்து முடிந்த 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இந்த மாணவர்கள் டி.ஜே.எஸ் மெட்ரிக் பள்ளி சார்பாக கபடியில் மாவட்ட, மாநில, தேசிய. அளவில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.இந்நிலையில் விளையாட்டில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு கடந்த ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல்-11 ஆம் தேதி செங்குன்றம் மற்றும் லயோலா கல்லூரியில் நடைபெற்றது.பின்னர் எம்.முகிலன், எஸ்.ராகேஷ் ஆகிய இருவரும் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வியில் இளங்கலை படிப்பை இலவசமாக படிக்கத் தேர்வு பெற்றனர். அதே போல மாணவர் எஸ்.கோகுலகிருஷ்ணன் லயோலா கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் இலவசமாக படிக்க தேர்வாகினர்.இந்நிலையில் 12ஆம் வகுப்பில் தேர்வில் மூன்றுமாணவர்களும் வெற்றி பெற்ற நிலையில் 3 மாணவர்களுக்கும் இலவச மேற் கல்விக்கான ஆணைகளை பெற்றனர்.டி.ஜே.எஸ் மெட்ரிக் பள்ளியில் சனிக்கிழமை நடந்த விழாவில் இந்த மாணவர்களுக்கு பாராட்டு விழாநடைபெற்றது. நிகழ்வில்.டி.ஜே.எஸ் கல்விக்குழும தலைவர் டி.ஜே.கோ.விந்தராஜன் தலைமை தாங்கிஇலவசமேற் படிப்பிற்குதேர்வானமாணவர்களை வாழ்த்தினார்.நிகழ்வில் பள்ளி முதல்வர் ஞானப்பிரகாசம், கபடி பயிற்சியாளர், உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர்ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

;