tamilnadu

img

மாநில உரிமைகளை பாதுகாக்க மாநிலங்களவையில் வலுவாக குரல் எழுப்பியவர்... டி.கே.ரங்கராஜன் நூல் வெளியீட்டு விழாவில் பிரகாஷ் காரத் பாராட்டு....

சென்னை:
நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்கவும் மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கவும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் டி.கே.ரங்கராஜன் வலுவாக குரல் எழுப்பியவர் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறினார்.

 மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மாநிலங்களவையில் ஆற்றிய உரைகள் மற்றும் எழுதிய கடிதங்களின் தொகுப்பின் தமிழாக்கத்தை பாரதி புத்தகாலயம் நூலாக வெளியிட்டுள்ளது. வீரமணியின் தமிழாக்கத்தில் வெளிவந்துள்ள இந்நூலை சென்னையில் ஞாயிறன்று (பிப்.28)  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் வெளியிட திமுக மாநிலங்களவைக்குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி. பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்கு சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமை வகித்தார். சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச்செயலாளர் ஜி.செல்வா முன்னிலை வகித்தார். தென்சென்னை மாவட்டச்செயலாளர் ஏ. பாக்கியம் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரகாஷ்காரத் பேசியதாவது:நாடாளுமன்ற மாநிலங்களவை யில் டி.கே.ரங்கராஜன்  ஆற்றிய உரைகளை தொகுத்து நூலாக வெளியிடப்பட்டுள்ளது. டி.கே.ரங்கராஜன் நாடாளுமன்றத்தில் மிகத்திறமையான நாடாளுமன்ற வாதியாக  செயல்பட்டதை எடுத்துரைக்கும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாட்டை  மட்டுமல்ல நாட்டில் உள்ள ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தின் குரலையும் ஜனநாயக இயக்கங்களின் குரலையும் மாநிலங்களவையில்  அவர் எதிரொலித்துள்ளார்.

வலுவாக குரல் கொடுத்தவர்
மதச்சார்பின்மையையும் அரசியல்சாசனத்தின் அடிப்படை கூறுகளை யும் பாதுகாக்கவேண்டிய அவ சியத்தை மாநிலங்களவையில் அவர் எடுத்துரைத்திருக்கிறார். மாநிலங்களவையில் அவர் ஆற்றிய 45 உரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதிகாரத்தில்  இருந்தபோதும்   பாஜக தலைமையிலான அரசாங்கத்தின்போதும் அவர் உறுப்பினராக இருந்தார். நாடாளுமன்றத்தில் அவர் உழைக்கும் வர்க்கத்திற்காக தொடர்ச்சியாக  வலுவாக குரல்கொடுத்தார். தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரான அரசின் தனியார்மய, தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக தனது கண்டனத்தை  வலுவாக பதிவு செய்தார். அதுமட்டுமல்ல தொழிலாளர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த பல மசோதாக்களை எதிர்த்து தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

கூட்டாட்சியை பாதுகாக்க....
இந்தியாவில் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ள சூழ்நிலையில் டிகே.ரங்கராஜன் உரைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். நாடாளுமன்ற ஜனநாயகத்தை மோடி தலைமை யிலான அரசு தொடர்ச்சியாக சீர்குலைத்து வருகிறது. மாநிலங்களவையில் தற்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது? மாநிலங்களவை என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் மன்றமாகும். கூட்டாட்சி முறை குறித்து நமது கருத்துக்களை எடுத்துரைக்கும் அவைதான் மாநிலங்களவை.  அப்படி முக்கியத்துவம் வாய்ந்த அவையின் மாண்புகளை சீர்குலைக்கும் வகையிலும் அவையின் அதிகாரத்தையும் அதன் முக்கியத்துவத்தையும்  குறைக்கும் வகையிலும் மோடி அரசு செயல்படுகிறது. தொடர்ந்து மாநிலங்கள வையை புறக்கணித்து முக்கியமான முடிவுகளை அரசு மேற்கொள்கிறது.

வாக்கெடுப்பு உரிமை பறிப்பு
நிதி மசோதாக்கள் உள்பட பல மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மாநிலங்களவையிலும் தாக்கல் 

படக்குறிப்பு : சென்னை புத்தகக் காட்சியில், டி.கே.ரங்கராஜன் உரைகள் நூலை பிரகாஷ் காரத் வெளியிட, தலைவர்கள் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ச்சி 4ம் பக்கம்

;