tamilnadu

img

100 நாள் வேலைத் திட்டத்திற்கு எதிரான கமலின் வாதம் பொருத்தமற்றது.... மாதர் சங்கம் விமர்சனம்.....

சென்னை:
கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரமாக உள்ள 100 நாள் வேலைத்திட்டத்திற்கு எதிரான மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்  கமல்ஹாசனின் வாதம் பொருத்த மற்றது என்று ஜனநாயக மாதர் சங்கம் விமர்சித்துள் ளது.இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

கடந்த வாரம் சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக “உள்ளாட்சியில் நல்லாட்சி”  என்ற தலைப்பில்நடைபெற்ற கருத்தரங்கில் தாங்கள் பேசிய கருத்துரை யை ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டோம். 100 நாள் வேலைத்திட்டம் ஒரு கண் தடுப்பு என்றும் மக்களை இன்னும் அது சோம்பேறிகளாக்குகின்றது எனவும் பேசியுள்ளீர்கள்.  இந்தியாவில் 25 கோடி பேரும் தமிழகத்தில் இரண்டுகோடி பேருக்கு மேற்பட்ட வர்களும் விவசாயத் தொழி லாளர்கள். மழை, வெள்ளம், வறட்சி,கொரோனா போன்ற பல்வேறு இயற்கை பேரி டர்கள் வரும்போதெல்லாம் பெரிதும் பாதிக்கப்பட்ட வர்கள் இவர்கள் தான்.நிரந்தர வேலையும், வரு மானமும் உத்தரவாதம் இல்லாமல் வாழ்ந்து வருபவர்களும் இவர்கள் தான்.  இப்படிப்பட்ட தொழிலாளர்களுக்கு ஓரளவுக்குவருமானம் கிடைக்க  வேண்டும்  மற்றும்  ஊராட்சி களின் கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்  14வது நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வெளியில் இருந்து இடதுசாரிகள் ஆதரவு கொடுத்த போது, இடதுசாரி களால்   வலியுறுத்தி கொண்டுவரப்பட்டது தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத சட்டம். இச்சட்டம் வந்த பிறகுதான் கிராமப்புற விவசாய தொழிலாளர்கள் மத்தியில் ஓரளவு நிம்மதியை பார்க்க முடிந்தது. குறிப்பாக இச்சட்டத்தில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் பெண் தொழிலாளர்கள். 2011-ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி  22.32 சதம்குடும்பங்கள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள்  என அரசு அமைத்த குழு  அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் அந்த குடும்ப தலைவிகள் பல்வேறு சிரமங்களை கடந்துதான்  குடும்பத்தை நடத்த வேண்டிய சூழல் உள்ளது. அத்தகைய பெண்களுக்கு இந்த 100 நாள் வேலை சட்டம் தான் ஓரளவு வருமானத்தை தருவதாக இருக் கிறது.
கடும் விலை வாசி உயர்வு, போதிய வருமான மின்மையால் கந்துவட்டி காரர்களிடமும், நுண்நிதி நிறுவனங்களிடமும், சுய உதவிக் குழுக்களிடமும் கடன் வாங்கிவிட்டு அதை எப்படி திரும்பக்  கட்டுவதென்று திகைத்துகொண்டி ருக்கும் பெண்கள்  எப்படிப் பட்ட சிரமமான வேலையாக இருந்தாலும் செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள்.தங்களை வருத்திக் கொண்டு வேலையும் செய் கிறார்கள். அத்தகைய தொழிலாளிகளை 100 நாள் வேலைத்திட்டம் சோம்பேறிகளாக்கு கிறது என்ற தங்கள் கருத்து ஏற்புடையதல்ல.இந்த வேலைக்கு ரூ. 375 ஊதியம் வழங்க வேண்டும் என அரசு அமைத்த குழு பரிந்துரைத்துள்ளது. ஆனாலும் இப்பொழுது ரூ.247 தான்கூலி நிர்ணயிக்கப்பட்டுள் ளது. அதுவும் கூட பல இடங்களில் முழுமையாக வழங்கப்படுவதில்லை.ரூ.60  முதல் ரூ.200  வரைதான் பெரும்பாலும் ஊதியம் கிடைக்கிறது. 

திட்டத்திற்கு நிதியை குறைத்த மோடி அரசு
ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைப்பதில்லை.ஆண்டுக்கு சராசரியாக 30 நாள் முதல் 70 நாட்கள்வரை தான் வேலை  வழங்கப்பட்டு வருகிறது.  விவசாயம் பொய்த்துப் போய் உள்ள நிலையில் விவசாய கூலிவேலையும் அவர்களுக்கு இப்போது சரியாக கிடைப்பதில்லை.   ஆனால் மத்திய அரசு 2019 -2020 இல் ரூ.38 ஆயிரம்கோடியையும், 2020-2021ல்ரூ.73 ஆயிரம் கோடியையும்பட்ஜெட்டில் 100 வேலைத்திட்டத்திற்கு குறைத்துள் ளது. இதனால் மேலும் வேலை நாட்கள் குறையும் வாய்ப்புள்ளது. கிராமப்புற ஏழை மக்களை பாதுகாக்கவேண்டும் என அரசால் கொண்டுவரப் பட்ட சட்டம் முறையாக அமல்படுத்தப்பட்டு மக்களுக்குஅதன் பயன் சென்றடை கிறதா என்ற கவலை இல்லாமல் மத்திய அரசு சட்டத்தை அமல்படுத்தாமல் முடக்குவதற்கு முயற்சி செய்கிறது என்ற அச்சத்தில் மக்கள் குறிப்பாக பெண்கள் வேதனைப்பட்டுக் கொண்டுள்ள னர். இச்சட்டம் அமலாக வில்லை என்றால் கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு எத்தகைய பாதிப்பு வரும்  என்பதை தாங்கள் 100 நாள் வேலை செய்யும்   பணியாளர்களுடன் கிராமப் புறங்களில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். சென்ற ஆண்டு துவங்கியகொரோனா  நோய்த்தொற்று   சீராகாத நிலையில் இன்றுவரை மக்கள் பசியிலும், பட்டினியிலும் வேதனைப் பட்டு வருகிறார்கள். இதுபோன்ற  நிலையில்கூட 55 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு வேலை வழங்கக் கூடாது என்ற அரசு அறிவிப்பு வந்தவுடன்  மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.இந்த வேலையும் இல்லை எனில் எப்படி குடும்பத்தை சமாளிக்க முடியும் என்ற பயத்தில் ஏழை - எளிய மக்கள் பயந்து கொண்டுள்ளனர்.

கிராமங்களுக்கு சென்று பாருங்கள் கமல்
இச்சட்டத்தை நகர்ப்புறத்திற்கு விரிவுபடுத்த வேண்டும். 100 நாள் வேலையை 200  நாட்களாகவும், சம்பளத்தை  ரூ.400 ஆகவும்உயர்த்தி வழங்க வேண்டும் என்ற  கோரிக்கைகளை  முன்வைத்து ஜனநாயக மாதர் சங்கம் தொடர்ந்து போராடி வருகின்றது. இந்நிலையில் பெற்ற இச்சட்டத்தை பாதுகாக்க வும், அதை பலப்படுத்தி ஏழை, எளிய மக்களுக்கு    பயன்பெறும் வகையில் தாங்கள் குரல் கொடுப்பதற்கு மாறாக இச்சட்டத்திற்குஎதிரான வாதத்தை முன்வை ப்பது பொருத்தமற்றது. எனவே தாங்கள்  கிராமப்புற மக்களின் வாழ்நிலை யையும், மனநிலையையும் அறிந்து கொள்ள  கிராமப்புறம் நோக்கி சென்று கள ஆய்வு மேற்கொண்ட  பிறகு எப்படி விவசாயத்தொழி லாளர்களை பாதுகாப்பது என்ற கருத்துக்களை வெளியிட வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக்குழு சார்பாக கேட்டுக்கொள் கிறோம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;