tamilnadu

img

ரயில் நிலைய பாதை திறப்பு சிபிஎம் தொடர் போராட்டத்திற்கு வெற்றி

கடலூர், டிச.13- கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில்  நிலையத்தில் அடைக்கப்பட்ட பாதையை  மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தின் விளைவாக வெள்ளியன்று(டிச.13) திறக்கப்பட்டது.  திருப்பாப்புலியூர் லாரன்ஸ் சாலையி லுள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு  ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்பு லன்ஸ் மற்றும் பொது மக்கள் செல்லும் பிரதான வழியை திடீரென அடைத்தனர். அந்த நொடியே அடைப்புக்கு எதிராக வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி  மார்க்சிஸ்ட் கட்சி  ஆர்ப்பாட்டம் நடத்தியது. அன்றிலிருந்து இன்றுவரை மார்க்சிஸ்ட் கட்சி அந்தப் பாதையை திறப்பதற்கு பல்வேறு போராட்டங்களை நடத்தியது. மேலும், கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜனும் இந்த பாதையை பார்வையிட்டார்.

பிறகு, தென்னிந்தியாவின் ஒட்டுமொத்த ரயில்வே அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்திலும் இந்த  கோரிக்கையை டி.கே. ரங்கராஜன் வலி யுறுத்தி பேசினார். ரயில்வே அதிகாரி களிடமும் மனு கொடுத்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம்  ரயில் மறியல் போராட்டம் நடத்தியதோடு மாவட்ட ஆட்சியர், சாராட்சியர், நகராட்சி ஆணையர், ரயில்வே நிலைய அதிகாரிகள் ஆகியோரிடமும் கோரிக்கையை வலி யுறுத்தினர். கடந்த நவம்பர் 14ஆம் தேதி திருச்சி சென்று தென்னக ரயில்வே மேலாளரிடமும் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது, மருத்துவமனைக்கு செல்ல பாதை திறக்கப்படும் என்று திருச்சி கோட்ட  மேலாளர் உறுதியளித்தார். இம்மாதம் 7 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில், 24 ஆம்  தேதிக்குள் இந்தப் பாதையை திறக்கா விட்டால் ரயில் மறியல் போராட்டம் நடத்து வோம்  என ரயில்வே நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர்.  இத்தகைய போராட்டத்தைத் தொடர்ந்து  மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள் டிச.13 அன்று அந்த பாதையை திறந்தனர். இதன் மூலம் ஒன்றரை  ஆண்டு காலமாக மார்க்சிஸ்ட் கட்சி நடத்தி  வந்த போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்  ளது. இந்த போராட்டத்தில் இயக்கங்களில் பங்கேற்ற வியாபாரிகள், பொது மக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருக்கும் மார்க்  சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆறு முகம், நகரச் செயலாளர் ஆர். அமர்நாத் ஆகியோர் நன்றி தெரிவித்திருக்கிறார். அதேபோல், மாவட்ட ஆட்சியர், வரு வாய் கோட்டாட்சியர் ,   டி.கே .ரங்கராஜன்  எம்பி, டி .ஆர் .எஸ் .ரமேஷ் எம்பி உள்ளிட் டோருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.

;