tamilnadu

முன்களப் பணியாளர்களாக அறிவிக்க கூட்டுறவு களப்பணியாளர்கள் கோரிக்கை....

சென்னை:
கூட்டுறவுத்துறை களப்பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கக் கோரி தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சௌந்தரராஜன், பொதுச்செயலாளர் வெ.செல்லையா ஆகியோர் முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடும் காவல்துறை, வருவாய்த்துறை, மருத்துவத் துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, தீயணைப்புத் துறை போன்று கூட்டுறவுத் துறையின் சார்பாக கூட்டுறவு சார்பதிவாளர்கள் (பொது விநியோகத் திட்டம்), கூட்டுறவு சார்பதிவாளர், கள அலுவலர்கள், நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோர் கொரோனா நிவாரணத் தொகைக் கான டோக்கன் வழங்குதல், தொகை பட்டுவாடா, அத்தியாவசியப் பொருட்கள் நகர்வு, விநியோகம், கொரோனா நிவாரண பொருட் கள் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான களப்பணிகளை மேற் கொள்ளும்போது பொது மக்களோடு தொடர்பு கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு பொது மக்களோடு தொடர்பு கொள்ளும் போது கொரோனா தொற்று ஏற்படுகிறது. இதுபோல் களப்பணி ஆற்றும் போது கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது .

எனவே இதரத்துறை அலுவலர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்துள் ளது போல் கூட்டுறவுத் துறையை சார்ந்த களப்பணியாளர்களான கூட்டுறவு சார்பதிவாளர்கள் (பொது விநியோகத் திட்டம்), கூட்டுறவு சார்பதிவாளர், கள அலுவலர் கள், நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோரை முன்களப்பணியாளர்களாக அறிவிக்கவும், அவர்களுக்கு முன்களப் பணியாளர்களுக்குரிய கொரோனா சிகிச்சை வசதிகளையும், நிதியுதவியையும் அனுமதிக்க உத்தரவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;