tamilnadu

img

சென்னையில் முழு ஊரடங்கு இல்லை... நீதிமன்றத்தில் அரசு விளக்கம்

சென்னை:
தமிழகத்திலோ சென்னையிலோ நூறு சதவீத ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை என, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருப்பதால், ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட் டம் ஏதும் அரசிடம் உள்ளதா? தற்போது பின்பற்றப் படும் நடைமுறையில் மாற்றம் ஏதும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் உள்ளதா? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, தமிழக அரசுக்கு வியாழனன்று (ஜூன் 11) கேள்வி எழுப்பியிருந்தது.
இதுதொடர்பாக நீதிமன்றம் எந்த வழக்கையும் விசாரணைக்கு எடுக்கவில்லை எனவும், தமிழக குடிமக்கள் என்ற முறையிலும், பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும் இக்கேள்வியை எழுப்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.இதுசம்பந்தமாக அரசின் கருத்தை அறிந்து வெள்ளிக்கிழமைஜூன் 12 தெரிவிப்பதாக அரசு வழக்கறிஞர் கூறியிருந்தார்.

நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அமர்வு, ஜூன் 12 வெள்ளியன்று வழக்குகளை விசாரித்து முடித்த நிலையில், தமிழக அரசுத்தரப் பில், சென்னையில் கொரோனா தொற்று உறுதி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை எனத் தெரிவித்தார்.மேலும், நிலைமையை தமிழக அரசின் குழு, தற்போது ஆய்வு செய்து வருவதாகவும், சென்னையிலோ, தமிழகத்திலோ முழு ஊரடங்கு அறிவிக்கும் திட்டம் ஏதுமில்லை எனவும் அவர் விளக்கம் அளித் தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சென்னையில் இருந்து மக்கள் வெளியே செல்வது தடுக்கப் பட்டுள்ளதாகவும், இ – பாஸ்கள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகிறதே, அவை உண்மையா எனக் கேள்வி எழுப்பினர்.அதற்கு அரசு தரப்பில், அப்படி எந்த தடையும் விதிக் கப்படவில்லை. அனைத்தும் வதந்திகள். இ–பாஸ்கள் தொடர்ந்து வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் கள் இ-பாஸ்கள் வழங்கி வருகின்றனர் என்றார்.

இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,“சென்னையின் முழு ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்று வாட்ஸ் அப் மூலம் பரப்பிய செய்தி தவறானது என்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”. என்றும் கூறினார்.'

;