tamilnadu

தூய்மைக் காவலர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்கக் கோரிக்கை

தஞ்சாவூர், ஜூன் 29- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பெரியார்-அம்பேத்கர் நூலகத்தில், சேதுபாவாசத்திரம் ஒன்றிய தூய்மைக் காவலர்கள் சங்க (சிஐடியு) அமைப்புக்  கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது.  சிஐடியு நிர்வாகி ஆர்.எஸ்.வேலுச்சாமி தலைமை வகித்தார். சிஐ டியு மாவட்டச் செயலாளர் சி.ஜெய பால், முறைசாராத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்  நீதிஆழ்வார்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தூய்மைக் காவலர்கள் சங்கத்தின் புதிய தலைவராக சாந்தி, செயலாளராக மலர்விழி, பொரு ளாளராக நாகம்மாள், துணைத் தலைவ ராக முத்துலெட்சுமி, துணைச் செயலாள ராக வாசுகி ஆகியோர் தேர்வு செய்ய ப்பட்டனர்.  “ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைக் காவலர்களுக்கு காலமுறை ஊதியமாக குறைந்தபட்சம் மாதம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். கொரோனா காலத்திற்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் உயிரி ழப்பு ஏற்பட்டால் ரூ.50 லட்சம் கிடைக்கும் வகையில் காப்பீடு செய்ய வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும்.  தூய்மைக் காவலர்களை பணி நிரந்த ரம் செய்ய வேண்டும். பணியாளர்க ளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். அதிகம் பணிச்சுமை உள்ள இடங்களில் கூடுதல் தூய்மைக் காவலர்களை நியமிக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;