tamilnadu

img

வேளாண் நிலம் : கேரள இடதுசாரி அரசின் புதிய சாதனை

கடந்த 2016 - 2017 காலகட்டங்களில் 4.84 லட்சம் டன்கள் என்ற அளவில் இருந்த கடல்மீன்கள் தரையிறக்கம் தற்போதைய 2018 - 2019 காலகட்டங்களில் 6.09 லட்சம் டன்கள் என்ற அளவில் உயர்ந்து காணப்படுகிறது. அண்மையில் கேரள மாநில மீன் மற்றும் கடல் ஆய்வுகள் பல்கலைக் கழகத்தில் கடந்த சர்வதேச மாநாட்டில் கடல் பொருளாதாரம் என்ற தலைப்பில் விவாதங்கள் நடைபெற்றது.கடந்த பல வருடங்களாக நமது கடலோர மாநிலங்களில் கடல் மீன்களின் தரையிறக்கம் (Marine fish landing) வெகுவாக குறைந்துவிட்டது. உலகம் முழுவதும் இத்தகைய நிலை தொடர்ந்த போதும், கேரளாவின் மீன்வளத் துறை மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான முயற்சிகள் காரணமாக இத்தகைய சூழல் மாறி உற்பத்திப் பெருக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2016 - 2017 காலகட்டங்களில் 4.84 லட்சம் டன்கள் என்ற அளவில் இருந்த கடல்மீன்கள் தரையிறக்கம் தற்போதைய 2018 - 2019 காலகட்டங்களில் 6.09 லட்சம் டன்கள் என்ற அளவில் உயர்ந்து காணப்படுகிறது. அண்மையில் கேரள மாநில மீன் மற்றும் கடல் ஆய்வுகள் பல்கலைக் கழகத்தில் நடந்த சர்வதேச மாநாட்டில் கடல் பொருளாதாரம் என்ற தலைப்பில் விவாதங்கள் நடைபெற்றன.

இவ்விழாவில் துவக்கவுரையாற்றிய கேரள மாநில மீனவர் துறை அமைச்சர் மெர்சி குட்டி அம்மா பேசும்போது, கேரள மாநில அரசு விஞ்ஞானிகளின் ஆலோசனையின்படி மேற்கொண்ட பல மீனவ முயற்சிகளே பெருக்கத்திற்கு காரணம் என்றார். குறிப்பாக மீன் குஞ்சுகளை பிடிக்க தடை, மீனவ சாதனங்களின் பதிவு முறை, இழுவலை தடை கண்காணிப்பு போன்றவை இதற்கு முக்கிய காரணம் என்றார். சுமார் 28 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள், விஞ்ஞானிகள் கலந்து கொண்ட இந்த மூன்று நாள் கருத்தரங்கில் கடல்சார் பொருளாதாரத்தில் வளங்குன்றா வளர்ச்சி இலக்குகள் (Sustainable development goals) வாயிலாக வறுமையை ஒழிப்பது மற்றும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வது பற்றிய விவாதங்கள் நடைபெற்றன. இவ்விவாதங்களில் சிறு மற்றும் குறு மீனவர்கள், பெண் மீனவ தொழிலாளர்கள், மீன் சாகுபடியாளர்களின் நலன்களை பாதுகாக்கும் நீல பொருளாதார திட்டங்கள் பற்றிய விவாதங்கள் மற்றும் செயல் திட்டங்கள் உருவாக்கம் பற்றியும் விரிவான கொள்கை முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் கேரளாவின் சார்பில் மத்திய வர்த்தகத் துறை வாயிலாக அமெரிக்கா விதித்துள்ள தடைகள் பற்றியும், இதனால் கேரள மாநில விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனை பற்றியும் விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக கேரள மாநில கடற்கரைகளில் ஆமை விலக்கு சாதனம் (Turtle Exclusive Devices) அனைத்து படகுகளிலும் பொருத்தப்பட்டு, உரிய கண்காணிப்பு நடைமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய நடைமுறைச் சூழலில் இதனை காரணம் காட்டி தொடர்ந்து ஏற்றுமதிக்கு தடைவிதிக்கும் முயற்சிகளை அகற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கேரளாவின் இடது ஜனநாயக முன்னணி அரசு கடல்வள பாதுகாப்பு மற்றும் மீன்வள முயற்சிகள் வாயிலாக உற்பத்திப் பெருக்கம் மற்றும் சிறு, குறு மீனவ மக்களின் வாழ்வில் ஒரு பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படச் செய்துள்ளது தேசிய அளவில் ஒரு மிகப் பெரிய சாதனையாகும்.

;