tamilnadu

img

தமிழக அரசின் பழி்வாங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு -அரசு ஊழியர்கள் கோபாவேசம்

தருமபுரி, ஜூன் 3-தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் பணி ஓய்வுநாளன்று பணி நீக்கம்செய்ததை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆவேச ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்துதுறை ஊழியர்களின் நலனுக்காக போராடிய அரசு ஊழியர்சங்கத்தின் மாநில தலைவர் மு.சுப்பிரமணியன் 32  ஆண்டுகால அரசுபணியில் நேர்மையாகவும் சிறந்த முறையில் பணியாற்றியவர். மேலும், அரசு ஊழியர், ஆசிரியர்களின் போராட்ட அமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பினை ஒருங்கிணைத்து பலகட்ட போராட்டத்தை நடத்தியவர். இவர் அரசுபணியில் ஓய்வுபெறும் நாளில் அரசாணைகள் மற்றும் நீதிமன்றதீர்பாணைக்கு முரணாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்செயலை வன்மையாக கண்டிப்பதுடன் தற்காலிக பணி நீக்கத்தை திரும்பபெற தமிழக அரசை வலியுறுத்தியும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவியகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்ஒருபகுதியாக, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புசங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாநில துணைத்தலைவர் எஸ்.தமிழ்செல்வி, மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், பொருளாளர் கே.புகழேந்தி, ஊரக வளர்ச்சித் துறைஅலுவலர் சங்க மாநில செயலாளர் ஆர்.ஆறுமுகம், மாவட்ட தலைவர்என்.ருத்ரையன், பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் எம்.சிவப்பிரகாசம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் பி.எம்.கெளரன், தமிழக ஆரம்ப பள்ளி கூட்டணி மாவட்டசெயலாளர் பொன்.ரத்தினம், மகளிர் துணைக்குழு அமைப்பாளர் பி.எஸ்.இளவேணில், நில அளவை ஒன்றிப்பின் மாநில துணை தலைவர் அண்ணாகுபேரன், கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜி.பழனியம்மாள், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் ச.கவிதா,சத்துணவு ஊழியர்சங்க மாவட்டசெயலாளர் சி.காவேரி, அங்கன்வாடி ஊழியர்சங்க மாவட்ட தலைவர் ஏ.தெய்வானை  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சங்கத்தின் மாவட்டத் தலைவர் முருகப்பெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்களை பழிவாங்கும் நோக்கில் செயல்படும் எடப்பாடி அரசை கண்டித்துகண்டன முழுக்கங்கள் எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்கமாவட்ட செயலாளர்இ.கோவிந்தராஜ், மாவட்ட பெருளாளர் செல்வம் மற்றும் நிர்வாகிகள், ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் உள்ளிட்டு 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர்அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கு.ராஜேந்திரபிரசாத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆர்.முருகேசன், மாவட்ட உதவிச் செயலாளர் ஈழவேந்தன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொறுப்பாளர் கலைச்செல்வன், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி, சுகாதார ஊழியர் சங்க மாநில செயலாளர் குப்புசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழுக்கமிட்டனர்.

;