tamilnadu

img

நூறுநாள் வேலைதிட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் வேலை அரூர் திமுக வேட்பாளர் செ.கிருஷ்ணகுமார் வாக்குறுதி

தருமபுரி, ஏப்.7-

நூறுநாள் வேலைதிட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் வேலை வாழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரூர்(தனி) சட்டமன்ற தொகுதி திமுகவேட்பாளர் செ.கிருஷ்ணகுமார் வாக்குறுதி அளித்தார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தருமபுரி மாவட்டம், அரூர் (தனி) சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செ.கிருஷ்ணகுமார்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஞாயிறன்று ஆண்டியூர், அம்மாபேட்டை, வேடகட்டமடுவு மற்றும் நரிப்பள்ளி சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசுகையில், திமுக ஆட்சிக்குவந்தவுடன் கல்விக் கடன் ரத்து, விவசாயக் கடன் ரத்து செய்யப்படும். மகாத்மா காந்திதேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் 150 நாள் வேலை வழக்கப்படும். மாணவர்களுக்கு ரயிலில் இலவச பயணச் சீட்டு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள், நகைக் கடன்கள் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்தார். மேலும், திமுக கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.இப்பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;