tamilnadu

img

தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமையை பறிக்காதே தொழிற்சங்கங்கள் ஆவேசம், இடதுசாரி கட்சிகள் மறியல் - கைது

தருமபுரி, ஜன.8- தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமையை பறிக் காதே என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அனைத்து  தொழிற்சங்கங்கள், இடதுசாரி  கட்சிகள் சார்பில் புதனன்று வேலை நிறுத்தம், மறியல்  போராட்டங்கள் நடைபெற்றன. தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமையை பறிக்கக்  கூடாது. தொழிற்சங்க கூட்டு பேர  உரிமையை நிலை நாட்டவேண்டும். பொருளாதார நெருக்கடியால் வேலை இழக்கும் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும். விவ சாயிகளை பாதுகாக்க எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.கிராமப்புற நூறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு நிதிஒதுக்கீடு செய்து, நகர்ப்புறங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும்.அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய மாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் புதனன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.  இதன்ஒருபகுதியாக, தருமபுரி தலைமை தபால் நிலை யம் முன்பு புதனன்று நடைபெற்ற மறியல் போராட் டத்திற்கு சிஐடியு மாவட்டச்செயலாளர் சி.நாகராசன் தலைமை வகித்தார். திமுக மாவட்டச் செயலாளரும், தரு மபுரி சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் பெ.சுப்பிர மணி, இந்திய கம்யூனிஸ்ட்கட்சி மாவட்டச்செயலாளர் எஸ்.தேவராசன், எல்பிஎப் மாவட்டச்செயலாளர் அன்பு மணி,ஏஐடியுசி மாவட்டச்செயலாளர் பி.மணி, ஏஐசி சிடியு மாவட்டச்செயலாளர் சி.முருகன், ஐஎன்டியுசி மாவட்டச்செயலாளர் தங்கவேல், எச்எம்எஸ் மாவட் டச்செயலாளர் அர்சுணன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம், வாலிபர், மாண வர் சங்கங்கள் சார்பில் தருமபுரி தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.  இந்த மறி யலுக்கு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பி.டில்லிபாபு தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் ஏ.குமார். மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸா மேரி, மாவட்டத்தலைவர் ஏ.ஜெயா,துணைத்தலைவர் கே.பூபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் தருமபுரி நகரம் ஆர்.ஜோதிபாசு, தருமபுரி என்.கந்தசாமி, நல்லம்பள்ளி கே.குப்புசாமி,காரிமங்கலம் பி.ஜெயராமன், பாலக்கோடு ஜி.நக்கீரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்க பேசினர். இதையடுத்து மறிய லில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர். அரூர் ரவுண்டானா அருகில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியு  மாவட்ட துணைத்தலைவர் எம்.மாரிமுத்து தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க  மாவட்டச்செயலாளர் எம்.முத்து,  விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் கே.என்.மல்லையன், எல்பிஎப் மாவட் டத்தலைவர் ஜெ.பழனி,மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டசெயற்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன்,      ஒன்றியச்செயலாளர்கள் அரூர் ஆர்.மல்லிகா,மொரபூர் கே.தங்கராசு, பாப்பிரெட்டிபட்டி சி.வஞ்சி, மாவட்டகுழு உறுப்பினர்கள் பி.வி.மாது,சி.வேலாயுதம், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் சி.ரகுபதி ஆகியோர் பேசி னர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டோரை போலீ சார் கைது செய்தனர்.  அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடை பெற்ற நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து  பென்னாகரம் பேருந்து நிலையத்தில் இடதுசாரி கட்சி கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன் தலைமை தாங்கினார்.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் அர்ஜுனன், விசுவநாதன், மாவட் டக்குழு உறுப்பினர்கள் ரவி, குமார், சிவா இடை கமிட்டி செயலாளர்கள் சக்திவேல், வெள்ளியங்கிரி சின்னசாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் சிவன், மாவட்ட துணைத்தலைவர் லோகு, மாவட்ட பொருளாளர் சிலம்பரசன், நகர செயலாளர் ராகுல் , சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ராஜி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் கரூரான், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு  உறுப்பினர் முருகேசன் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.  ஊத்தங்கரை
ஊத்தங்கரை ரவுண்டானா அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.கே.நஞ்சுண்டன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கே.மகாலிங்கம், சிங்கா ரப்பேட்டை பகுதிச்செயலாளர் கே.எம்.எத்திராஜ், மாவட் டகுழு உறுப்பினர் எம்.அண்ணாமலை உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.  அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை முன்னிட்டு  மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டமைப்பினர் தருமபுரி பிஎஸ்என் எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலை வர் எம்.சுருளிநாதன் தலைமைவகித்தார். மாநில துணைத்தலைவர் ஜி.பழனியம்மாள், மாவட்டச்செய லாளர் ஏ.சேகர், பிஎஸ்என்எல்இயூ மாவட்டச்செயலாளர் பி.கிருஷ்ணன், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட்ட இணைச்செயலாளர் ஏ.மாதேஸ்வரன், கிளைச் செயலா ளர் சந்திரமெளலி, பிஇஎப்ஐ மாவட்டத்தலைவர்கள் கலிபுல்லா, ஜெய்சங்கர், ஓய்வூதியர் கூட்டமைப்பு மாவட்டத்தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.                                                                                                                                                                                                                       நாமக்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நாமக்கல் பூங்கா சாலை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான கே.தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி, ந.வேலுசாமி,கே.தங்கமணி, பி.ஜெயமணி, சு.சுரேஷ் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.சிங்காரம், எஸ்.ஆறுமுகம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.  இதேபோல் ராசிபுரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற மறியலுக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். ராசிபுரம் பிரதேச செயலாளர் ஜீ.செல்வராஜ், நாமகிரிபேட்டை ஒன்றிய செயலாளர் கே.சின்னுசாமி, விதொச மாவட்டச் செய லாளர் வி.பி.சபாபதி, மாதர் சங்கத் தலைவர் ராணி, மலை வாழ் மக்கள் சங்கத் தலைவர் பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.  நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு  நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் பி.சிங்காரம் தலைமை வகித்தார். ஏஐடியுசி  மாவட்ட செயலாளர் நா.முருகராஜ், எல்பிஎப் மாவட்ட  கவுன்சில் செயலாளர் கபாடி பழனியப்பன், எச்எம்எஸ்  மாவட்ட தலைவர் ஏ.கலைவாணன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர்  ந.வேலுசாமி, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் எல்.ஜெயக்கொடி, கு.சிவராஜ், ஏஐடியுசி தலைவர் சி.ஜெயராமன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். பள்ளிபாளையம் ஸ்டேட் பேங்க் முன்பு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் எம்.அசோகன் தலைமை வகித்தார். ஏஐசிசிடியு தலைவர் என்.வெங்கடேசன் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் மோகன், தனபால், முத்துகுமார்,காசிவிஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிபிஎம் ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி வாழ்த்தி பேசினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.  திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு தொழிற்சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏஐடியுசி மாவட்ட தலைவர் எஸ்.ஜெயராமன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட பொருளாளர் ஏ.கே.சந்திரசேகரன், மாவட்ட துணைத்தலைவர் எம்.செங்கோடன், மாவட்ட குழுஉறுப்பினர் ஐ.ராயப்பன், ஏஐடியுசி கட்டுமான சங்கத் தலைவர் சி.நந்தகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.வேலாயுதம் வாழ்த்தி பேசினார். பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கல்லாங்காடுவலசு பகுதியில் நடைபெற்ற சாலை மறிய லுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.பெருமாள் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சி.துரைசாமி, ஒன்றிய நிர்வாகிகள் ராமசாமி, தனேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் எம்.ஆர்.முருகேசன் வாழ்த்திப் பேசினார். நாமக்கல் பூங்கா சாலை முன்பு மத்திய, மாநில பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப் புக் குழு தலைவர் எம்.காளியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏ.குப்புசாமி, மாவட்டத் தலைவர் கே.சின்னுசாமி, ஒருங்கிணைப்புக்குழு மாவட்டச் செயலா ளர் கே.எஸ்.இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  ராசிபுரத்தில் ஏஐடியுசி தலைவர் தம்பிராஜா,சிஐடியு ரங்கசாமி மற்றும் பழனிவேல் உள்ளிட்டோர் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் நாமக் கல் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்க உதவித் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். செயலா ளர்கள் வீ.ஈஸ்வரன் ஆர்.ஏ.துரைசாமி, எம்.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டம் முழுவதும் அஞ்சல் ஊழியர்கள் 99 சதமானார் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பிஎஸ்என்எல் ஊழியர்கள் 
பிஎஸ்என்எல்இயு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு  இடங்களில்ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. திருச் செங்கோடு பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மாவட்ட பொருளாளர் பி.தங்கராஜ் தலைமை வகித்தார். மாநில உதவித் தலைவர் எஸ்.தமிழ்மணி கண்டன உரை யாற்றினார். நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கிளைத் தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். ஓய்வூதியர் சங்க தலைவர் கோபால், மாவட்ட உதவித் தலைவர் ராம சாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட் டத்தில் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.  பரமத்திவேலூர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மாவட்ட உதவிச் செயலாளர் எம்.சண்முகம் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் ரமேஷ், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் அபிராமசுந்திரி உட்பட திரளான ஊழி யர்கள் கலந்து கொண்டனர். ராசிபுரம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கிளைத் தலைவர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் பி.எம்.ராஜேந்திரன் உட்பட திரளாக ஊழி யர்கள் கலந்து கொண்டனர் .
சேலம்
மத்திய மோடி அரசின் மக்கள் விரோத மற்றும் தொழி லாளர் விரோத போக்கை கண்டித்து இடதுசாரி கட்சிகள் மற்றும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆவேச மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தை சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பி னர் பி.செல்வசிங் துவக்கி வைத்தார். சிபிஐ மாவட்ட செயலாளர் எ.மோகன், சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, சிஐடியு மாவட்ட தலைவர் பி.பன்னீர் செல்வம், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, ஏ.கோவிந்தன், சிஐடியு மாவட்ட நிர்வாகி எஸ்.கே.தியா கராஜன், எல்பிஎப் பழனியப்பன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் விமலன், ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் வடமலை, ஏஐசிசிடியு வேல்முருகன், எஸ்எம்எஸ் கணே சன், அங்கன்வாடி ஊழியர் சங்க நிர்வாகிகள் ரஹ்மத்,  பி.சரோஜா உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கத் தினர் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மறியல் போராட் டத்தில் பங்கேற்று கைதாகினர். சேலம் மாவட்டம், ஆத்தூர் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட் டத்தில் பெண்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர்எ.முருகேசன் தலைமை தாங்கினார். இதில் சிபிஎம் கெங்கவல்லி தாலுகா செயலாளர் ஜோதிகுமார் சிஐடியு போக்குவரத்து சங்க நிர்வாகி மணிமாறன், ஆட்டோ சங்க நிர்வாகி கண்ணன், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க தலைவர் இல.கலை மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளர் பொன்னுசாமி, மாவட்ட நிர்வாகி சடையன் முருகன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று கைதாகினர். பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு வீ.தங்கவேல் தலைமை தாங்கினார். இதில் தாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கல்வரா யன்மலை செயலாளர் ஏ.பொன்னுசாமி, வாழப்பாடி தாலுகா செயலாளர் வி. பழனிமுத்து, பெருமா, மாதேஸ் வரன், ஜெயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  மேட்டூர் அரசு மருத்துவமனை முதல் பாரத ஸ்டேட் பேங்க் வரை அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்ட பொரு ளாளர் பி.இளங்கோ, மாவட்ட நிர்வாகி சி.கருப்பணன், எல்பிஎப் கேஸ் ராஜாமணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர். ஓமலூர் பேருந்து நிலையம் முன்பு விவசாய தொழி லாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. விவசாய சங்க மாவட்ட செயலாளர் எ.ராமமூர்த்தி தலைமையில் நடை பெற்ற இம்மறியலில் ஓமலூர் தாலுகா செயலாளர் பி.அரியாக்கவுண்டர், நங்கவள்ளி விவசாய சங்க நிர்வாகி பாலாஜி, மேச்சேரி ஒன்றிய செயலாளர் மணிமுத்து உள் ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதா கினர்.

;