tamilnadu

img

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முகாமை முதல்வர் துவக்கி வைத்தார்...

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம், நேதாஜி ஜவுளிப் பூங்காவில், 18 முதல் 44 வயரை வரை உள்ள பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாமினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 20 வியாழனன்று தொடங்கி வைத்தார்.

18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டத்தை மாநில அரசுகளே செயல்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவையொட்டி, மத்திய அரசு ஒதுக்கீட்டின் கீழ், மாநில அரசுகள் வாங்கும் முறையின் அடிப்படையில் 1.5 கோடி தடுப்பூசிகளையும், உலகளாவியஒப்பந்தப்புள்ளி மூலமாக 3.5 கோடி தடுப்பூசி களையும் வாங்கிட அனைத்து முயற்சிகளையும் அரசுஎடுத்துவருகிறது. மேலும், இந்த வயதிற்குட்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்வதால், இத்திட்டத்தின் முதற் கட்டத்தில்,அதிக தொற்று பாதிப்பு அபாயம் உள்ளவர்களுக்கும், தொழிற்சாலை களில் பணிபுரிவோருக்கும் தடுப்பூசி செலுத்திட  முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  

இதன்படி, 18 முதல் 44 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தும் பணியினை முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் மே 20 வியாழனன்று திருப்பூர் மாவட்டம், நேதாஜி ஜவுளிப் பூங்காவில் தொடங்கி வைத்தார்.மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். இப்பூங்காவில் 12 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களில் தகுதியுள்ளோர் அனைவருக்கும் தடுப்பூசி அளிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திருப்பூர் ராம்ராஜ் காட்டன் தலைவர் நாகராஜன் ரூ.1 கோடிக்கான காசோலையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். மேலும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ராஜா எம்.சண்முகம் ரூ.50 லட்சத்திற்கான காசோலையினை மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.இந்தநிகழ்வில் வீட்டுவசதித் துறைஅமைச்சர்   சு. முத்துசாமி, செய்தித் துறைஅமைச்சர்  மு.பெ. சாமிநாதன், மின்சாரத்துறை அமைச்சர்  வி. செந்தில்பாலாஜி, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்றமற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் க. விஜயகார்த்திகேயன்  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். 

;