tamilnadu

கொரோனா தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் மக்களை வாட்டும் தேனி மாவட்ட நிர்வாகம் சிபிஎம் கண்டனம்

தேனி, மே.11- கொரோனா தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் மக்களை வாட்டும் பணியினை மாவட்ட நிர்வாகம் மேற் கொண்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது . இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செய லாளர் டி.வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கொரோனா தடுப்பு தொடர்பாக சிவப்பு மண்டலமாக இருந்த தேனி மாவட்டத்தை, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் ,மாவட்ட நிர்வாகம் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீரிய முறையில் சிகிச்சை அளித்து அவர்கள் தொடர்ந்து கண்காணிப் பட்டு வருவது சிறப்பு அம்சம். அதனை தொடர்ந்து மத்திய அரசு தேனி மாவட் டத்தை ஆரஞ்சு மண்டலமாக அறி வித்துள்ளது. இந்நிலையில் ஆரஞ்சு மண்டலத் தில் உள்ள மாவட்டங்களுக்கு ஊர டங்கிலிருந்து பல தொழில்களுக்கு மத்திய அரசு தளர்த்தி அறிவிப்பு வெளி யிட்டுள்ள நிலையில் தேனி மாவட்ட நிர்வாகம் மக்களை பாதிக்கிற வகை யில் பல்வேறு கெடுபிடிகளை மேற் கொண்டுள்ளது.

அத்தியாவாசிய பொருட்கள் வாங்க வெளியில் செல்ல வேண்டுமானால் செல்போன் செயலி மூலம் பதிவு செய்து, அனுமதி பெற்று அதுவும் 3 மணி நேரத்திற்குள் திரும்ப வேண்டும். அவ்வாறு அனுமதி பெறா மல் செல்லும் வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு வர் 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே அனுமதிக்கப்படும் என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் நிறைந்த தேனி மாவட்டத்தில் இது எப்படி நடை முறை சாத்தியமாகும் என்ற கேள்வி எழுகிறது. அனைவரும் ஆண்டிராய்டு செல்போன் வைத்திருந்தது, அது வும் இயக்க தெரிந்தவர்கள் எத்தனை பேர், அவசரமாக வெளியில் செல்ல அனுமதிக்காக காத்திருக்க வேண் டுமா என்ற கேள்வியும் எழுகிறது. இது போன்ற அறிவிப்புகள் அரசு கோப்புக் காக மட்டுமே பயன்படும்.

வங்கிச் சேவை
மற்ற மாவட்டங்களில் ஆரஞ்சு மண்டலத்தில் வங்கிகள் வழக்கம் போல் செயல்பட்டு வரும் நிலை யில் தேனி மாவட்டத்தில் முழுமை யாக செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதிக்காததால் வாடிக்கையா ளர்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப் பட்டுள்ளனர் .கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள மக்கள், வங்கிகளில் கடன் பெற முடியாமலும், புதிய நகை கடன் பெறமுடியாமலும், வட்டி செலுத்த முடியாமலும் தவித்து வருகிறார்கள். சேமிப்பு கணக்கு உள்ளவர்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிப் பட்டு வருகிறார்கள். எனவே பிற மாவட்டங்களில் அனுமதிக்கப்படு வது போல் வங்கி சேவையை அனு மதிக்க வேண்டும்.

தொல்லை தரும் ஒருவழிப்பாதை 
தேனி மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களிலிருத்து வருபவர்கள் ,வெளியில் சென்று திரும்புபவர்கள் தேவதானப்பட்டி வழியாக மட்டுமே வரவேண்டும் .அங்கு மட்டுமே மருத் துவக்குழுக்கள் பரிசோதனை செய்து தேனிக்கு அனுப்புவர் என அறிவிக்கப் பட்டுள்ளது. மதுரை வழியாக வரு பவர்கள் ,தேனி மாவட்டத்திலிருத்து தினம் தோறும் உசிலம்பட்டி, மதுரை மார்க்கமாக வேலைக்கு செல்ப வர்கள் கடுமையாக பாதிக்கப்படுவ தோடு, கால விரயம் ஏற்படுகிறது .எனவே ஆண்டிபட்டி அருகே திம்மசர நாயக்கனூர் அருகே அமைக்கப் பட்டுள்ள சோதனை சாவடியில் தேவையான மருத்துவ குழுக்களை அமைத்து பரிசோதனை செய்து தேனி மாவட்டத்திற்கு அனுமதிக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரி வித்துள்ளார்.

;