tamilnadu

img

விளையாடும் வயதில் போராட்டக் களத்தில் வியப்பூட்டும் தோழர் தேஜஸ்ரீ....

மயிலாடுதுறை:
விளையாடும் வயதில் மக்கள் நலனுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் நடைபெறும் எண்ணற்ற போராட்டங்களில் முன்னின்று பங்கேற்று சோர்வின்றி களமாடி வருகிறார் 10 வயதேநிரம்பிய தேஜஸ்ரீ என்னும் தோழர். மக்களின் கவனத்தை பெற்று வருகிற தேஜஸ்ரீமயிலாடுதுறை கலைஞர் நகரில் வசித்துவருகிறார். 5 ஆம் வகுப்பு படித்து வரும்இவர் விடுமுறை நாட்களில் நடைபெறும்போராட்டங்களில் பங்கேற்று வந்திருக்கிறார். கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு நாள்தோறும் போராட்டக் களத்திலேயே இருப்பதோடு மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு நாள்தோறும் வந்துவிடுகிறார். கட்சி நடத்தும் போராட்டங்களில் மட்டுமல்லாது விவசாயிகள் சங்கம்,வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாணவர்சங்க போராட்டங்களிலும் தீவிரமாக பங்கேற்று வருகிறார்.

குறிப்பாக வேளாண்சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மயிலாடுதுறை, செம்பனார்கோவில், குத்தாலம், சீர்காழி பகுதிகளில் நடைபெற்ற முற்றுகை போராட்டம், உருவபொம்மை எரிப்பு என அனைத்து போராட்டங்களிலும் கலந்துகொண்டு கைதாகி இருக்கிறார்.போராட்டக் களத்தில் தீவிரமாய் பங்கேற்கும் தேஜஸ்ரீ குறித்து அவரது தந்தையும் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக்குழு உறுப்பினருமான தோழர் துரைக்கண்ணுவிடம் விசாரித்தபோது, ஊரடங்கிற்கு முன்பு விடுமுறைநாட்களில் கட்சி அலுவலகம் வந்துகொண்டிருந்தாள். ஊரடங்கு காலத்தில்காலையில் நான் வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்னதாகவே தயாராகி விடுவதை வழக்கமாக்கி கொண்டாள். கட்சிதோழர்களிடம் பழக தொடங்கிய பிறகுமுதல் நாளே நாளை எங்கு போராட்டம்?எத்தனை மணிக்கு? என்று எனக்கு தெரியாமலேயே விசாரித்து விடுகிறாள்.சில போராட்டங்களின் போது மோதல் உருவாகும் சூழல் இருக்கும் கைதாகி விட வாய்ப்புள்ளது என கூறி, ‘நீ வரவேண்டாம்’ என்றால் சாப்பிட மறுத்துயாரிடமும் பேச மாட்டாள். கைதாகிமண்டபத்திற்கு அழைத்து செல்ல காவல் வாகனம் வந்தால் முதல் ஆளாகஏறி விடுவாள். வீட்டில் எந்நேரமும் கம்யூனிஸ்ட் தலைவர்களை பற்றிய வரலாற்றை கேட்பதுதான் அவளின் வேலையாக இருக்கிறது என்றார் மகிழ்ச்சியுடன். லட்சக்கணக்கான குழந்தைகளின் நலனுக்காகவும் தொடர்ந்து போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில்தேஜஸ்ரீ போன்ற குழந்தை தோழர்களின்போராட்ட குணம், மக்கள் நலனுக்காக போராடும் தோழர்களுக்கு நிச்சயம் கம்பீரமான வேகத்தை தரும். 

செ.ஜான்சன், தரங்கம்பாடி

;