tamilnadu

பொதுதேர்வு முடியும் வரை விடுதிகளில் தங்கி கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்

நீலகிரி, ஜூன் 8- நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறையின் சார்பில் உள்ள விடுதி கள் சுத்தம் செய்யப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப் பட்டுள்ளது. மாணவ, மாணவியர்கள் பொதுத் தேர்வு முடியும் வரை விடுதிகளில் தங்கிக் கொள்ள லாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது, தமிழக அரசு 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் வருகின்ற 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு 13 பள்ளி விடுதிகள் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள் ளது. மேலும் எதிர் வருகின்ற 11 ஆம் தேதி முதல் மேற்காணும் விடுதிகள் திறக்கப்படவுள்ளது. எனவே, பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாண வியர்கள் விடுதிகளில் பாதுகாப்புடன் தங்கி, தனி மனித இடைவெளியை தவறாமல் கடைபிடித்து பொதுத் தேர்வு முடியும் வரை விடுதிகளில் தங்கிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

;