tamilnadu

img

பொது விநியோக முறையை செயல்படுத்துக புதுச்சேரியில் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, ஜூலை 9- நியாயவிலைக் கடைகள் மூலம் பொது விநியோக  முறையை பலப்படுத்தக் கோரி இடதுசாரி கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனா தொற்று மனித பேரழிவுகளையும், பொருளாதார பாதிப்புகளையும் உருவாக்கியுள்ளது.  வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களை பாதுகாக்க உணவும், ஊட்டச்சத்தும் அவசியம். எனவே பட்டினிச்  சாவுகளை தடுக்கும் வகையில், பொது விநியோகத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். அரிசி,  பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் நியாயமான விலையில், நியாய விலைக் கடைகள் மூலம் வழங்க வேண்டும். பிரதமரின்  கரிப் கல்யாண் திட்டத்தின்கீழ் ஏழை மக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும். புதிய சிவப்பு ரேஷன்  அட்டை  கோரி விண்ணப்பித்துள்ள அனைவருக்கும்  வழங்க வேண்டும். மஞ்சள் ரேஷன்  அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் ஆசிரி யர்களை ஈடுபடுத்துவதை உடனடியாகக் கைவிட்டு, நியாய விலைக் கடை ஊழியர்களை இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

மாநில அரசின் இலவச அரிசி திட்டத்தை செயல்ப டுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, சிபிஐ (எம்.எல்) சார்பில் இந்த ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை  அருகே வியாழனன்று (ஜூலை 9) நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மூத்ததலைவர் முருகன், இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் நாரா. கலைநாதன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சோ.பாலசுப்பிரமணியன் ஆகி யோர் தலைமை தாங்கினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம், நகர  குழு செயலாளர் மதிவாணன், பிரதேச குழு உறுப்பி னர் சரவணன் (சி.பி.எம்), வி. எஸ்.அபிஷேகம் (சிபிஐ),  புருஷோத்தமன் (சிபிஐஎம்எல்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் தட்டாஞ்சாவடி குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாநிலச் செயலாளர் சலீம்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினர் மோதிலால் ஆகியோர்  தலைமை தாங்கினர். போராட்டத்தை துவக்கி வைத்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சுதா சுந்தர்ராமன் பேசினார். இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் விசுவ நாதன் ஆர்ப்பாட்டத்தை நிறைவுசெய்து பேசினார். இதில் இடதுசாரி கட்சி நிர்வாகிகள் சீனிவாசன், ராமச்சந்திரன் சத்தியா, சேது செல்வம் உட்பட  பலர்  கலந்து கொண்டனர். இறுதியில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரி வல்லவனிடம் மனு அளித்தனர். அதேபோல் புதுச்சேரி முழுவதும் நியாயவிலைக்  கடைகள் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;