tamilnadu

img

புதுச்சேரி சட்டமன்றம் கிரண்பேடியின் உத்தரவை ரத்து செய்த பேரவைத் தலைவர்

புதுச்சேரி:
புதுச்சேரி அமைச்சர வைக்கு தெரியாமல் வெளியான உள்ளாட்சித் துறை ஆணையர் விளம்பரத்தை பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து ரத்து செய்து உத்தரவிட்டார்.புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் திங்களன்று (ஜூலை 22) காலை 10 மணிக்கு
துவங்கியது. மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பை பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து வாசித்தார். அதனை தொடர்ந்து  முன்னாள் முதல்வர் ஜானகிராமன், முன்னாள் உறுப்பினர் வேணுகோபால், முன்னால் ஆளுநர் விரேந்திர கட்டாரியா, தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோரது மறைவுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நீர்மேலாண்மை குறித்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும், மாணவர்களுக்கு எதிரான  நீட், மருத்துவக் கல்லூரி எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான எக்ஸிட்தேர்வுகள் மற்றும் மத்தியஅரசின் மும்மொழிகொள்கை யை கண்டித்தும்  முதல்வர் நாராயணசாமி நான்கு மசோதாக் களை தாக்கல் செய்தார்.நீர் மேலாண்மை குறித்த மசோதா மீது அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் விவாதம் செய்தனர். முதல்வர் பதில் அளித்ததும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

விளம்பரம் ரத்து
சமீபத்தில் பத்திரிகையில் வெளியான உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆணையர் நியமனம் குறித்து வெளியான விளம்பரம் குறித்து அரசுக் கொறடா அனந்தராமனும், திமுக எம்எல்ஏ சிவாவும் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதில் அளித்த துறைஅமைச்சர் நமச்சிவாயம், “தேர்தல் ஆணையரை நிய மிக்க அமைச்சரவை முடிவு எடுத்து முதல்வர் வழியாக கோப்பு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஓராண்டு கழித்தும் கோப்புக்கு துணை நிலைஆளுநர் ஒப்புதல் அளிக்கா மல் இருந்த  நிலையில் பத்தி ரிகையில் தற்போது விளம்பரம் வந்துள்ளது. இது தொடர்பாக முதல்வரையும், துறை அமைச்சரான என்னையும் கலந்து ஆலோசிக்கவில்லை. எங்கள் கவனத்துக்கும் வர வில்லை. நேரடியாக துணை நிலை ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. முதல்வர், அமைச்சருக்கு தெரியாமல் ஆளுநர் தனி முடிவு எடுத்து அறிவித்துள்ளார். பேரவைத் தலைவர் இதற்கான கோப்பி னை வரவைத்து முழுமையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
அதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் நாராயணசாமி, “ஆணையரை நியமிக்க அமைச்சரவைக்கு அதிகார முண்டு. அமைச்சரவை பரிந்துரைப்படி செயல்பட ஆளுநரிடம் கூறினேன். மக்கள்பிரதிநிதிகளின் கவனத்திற்கு வராமல் ஆளுநர் தன்னிச்சையாக முடிவு செய்து ள்ளார். விதிமுறை மீறி அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.இதனையடுத்து,  இப்பிரச்ச னை தொடர்பான கோப்பினை உள்ளாட்சித்துறை என்னிடம்உடனே சமர்பிக்க வேண்டும். அமைச்சருக்கோ, அமைச்சரவைக்கோ சட்டத்துறை ஒப்புதல் இல்லாமல் சட்டத் திட்டம் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.சட்டவிதிமுறை மீறி தனிநபரோ, குழுவோ எதையும் கையில் எடுக்க முடியாது. இதை சட்டப்பேரவை அனுமதிக்காது. அமைச்சரவைக்கு தெரியாமல் அரசிதழில் வெளியிடாமல் தன்னிச்சையாக வெளியான உள்ளாட்சித்துறை விளம்பரத்தை ரத்து செய்கிறேன்” என்று பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்தார்.இந்த பிரச்சனையில் விதிமுறைகளை மீறியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேரவைத் தலைவர் தெரிவித்தார்.இதனையடுத்து, பேரவைக்கூட்டத்தை செவ்வாய்கிழமை (ஜூலை23) காலை 10மணிக்கு பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து ஒத்திவைத்தார்.இந்த கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி பங்கேற்கவில்லை.

;