tamilnadu

img

அதானியிடம் விமான நிலையங்கள்

மோடி அரசின் கூட்டுக்களவாணித்தனம் - மத்தியத் தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம்

புதுதில்லி, ஆக.25-  பயணிகள் மற்றும் விமான நிறுவனங்களிடம் மேலும் ஒட்டச் சுரண்டுவதற்கு வழிவகுத்துக்கொடு க்கும் வகையில் நாட்டிலுள்ள விமான நிலையங்கள் பலவற்றை அதானி கம்பெனிக்கு தாரைவார்க்க முன்வந்துள்ள மோடி அரசுக்கு   மத்தியத் தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.  இதுதொடர்பாக மத்தியத் தொழிற் சங்கங்களான சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்களும் கூட்டாக வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது: 

2020 ஆகஸ்ட் 18 ஆம் தேதி அறி விப்புக்குப் பின்னர், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மத்திய அமைச் சரவைக்கு முன், ஆகஸ்ட் 19 அன்று ஜெய்ப்பூர், கவுஹாத்தி, திருவனந்த புரம் ஆகிய விமானநிலையங்களை பி-பி-பி (பொது-தனியார்-ஒத்து ழைப்பு) மாடலில் தனியாரிடம் ஒப்படைத்திட, முன்மொழிவினை வைக்க இருப்பதாகவும், அதனை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொள்ளும் என்றும் கூறியிருக்கிறார். இதுவரை நாட்டிலுள்ள 12 விமான நிலையங்கள் இவ்வாறு தனியாரி டம் ஒப்படைத்திட முடிவு செய்யப் பட்டுள்ளன. லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரூ, திருவனந்த புரம், கவுஹாத்தி ஆகியவை மேற்கண்டவாறு பிப்ரவரியிலும், அமிர்தசரஸ், வாரணாசி, புவனேஷ் வர், இந்தூர், ரெய்ப்பூர், திருச்சி ஆகிய விமானநிலையங்களை செப்டம்பரில் ஒப்படைக்கப்படவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அனைத்து விமான நிலையங்களும் அதானி குழுமத்திற்கே இதுவரை ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு தனிப்பட்ட தனியார் நிறு வனத்திற்கே அனைத்து விமான நிலையங்களும் ஒப்படைக்கப்படு வது, அது அதன் ஏகபோகத்திற்கு இட்டுச்சென்று, பயணிகளிடமும், விமான நிறுவனங்களிடமும் மேலும்  ஒட்டச்சுரண்டுவதற்கு வழிவகுத் திடும். ஏற்கனவே மும்பை மற்றும் தில்லி விமான நிலையங்களில் இந்திய ஏர்போர்ட் அத்தாரிட்டி நிறு வனத்திற்கு வரவேண்டிய வரு வாயில் பெருமளவு குறைந்திருக்கும் கசப்பான அனுபவம் நமக்கு உண்டு. எனவே, விமான நிலையங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவினை உடனடியாக நிறுத்த வேண்டும். ஏனெனில் இது பயணி கள் மற்றும் விமான நிறுவனங்களின் செலவுகளை அதிகரித்திடும்.

இந்திய ஏர்போர்ட் அத்தாரிட்டி என்னும் அரசு நிறுவனம் நாட்டில் 100க்கும் மேற்பட்ட விமான நிலை யங்களைச் சொந்தமாக நிர்வகித்து வருகிறது. இவற்றில் எதுவும் நஷ்ட த்தில் இயங்கவில்லை. இந்தியா வின் முதல் சர்வதேச விமானநிலைய மான திருவனந்தபுரம் விமான நிலை யம், ஒவ்வோராண்டும் 125 கோடி ரூபாய் லாபம் ஈட்டிவருகிறது. கேரள அரசாங்கம் அதனைத் தாங்கள் ஏற்று நடத்துவதாகக் கூறுகிறது. இப் போது இந்தப் பிரச்சனை நீதிமன்றத் தின் முன் நிலுவையில் இருக்கிறது. எனினும் மத்திய அரசாங்கம் கேரள அரசாங்கத்தை  முன்கூட்டியே  தடுத்துநிறுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அதானி குழு மத்திற்கு விமான நிலையங்களை ஒப்படைப்பதற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை கேரள மாநில சட்டமன்றத்தில் ஆகஸ்ட் 24 அன்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளனர். இது மத்தியில் உள்ள பாஜக அரசாங்கத்தின் முகத்தின் மீது கொடுக்கப்பட்ட அறையாகும்.

இப்போது, ஆகஸ்ட் 21 அன்று, ஐஆர்சிடிசி எனப்படும் அரசு நிறு வனத்திலும் அதிக அளவில் பங்கு களைத் தனியாரிடம் ஒப்படைத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்ப தாக செய்திகள் வெளிவந்துள்ளன. மத்திய அரசு இவ்வாறு நாட்டின் சொத்துக்களைத் தங்களுடைய கூட்டுக்களவாணித் தனியார் முத லாளிகளிடம் ஒப்படைத்திடத் துடித்துக் கொண்டிருப்பதற்கு மத்தி யத் தொழிற் சங்கங்கள் கடும் கண்ட னம் தெரிவிக்கின்றன. இது பயணம் செய்திடும் சாமானிய மக்களின் நலன் களுக்கு எதிரானது என்று  எச்சரிக்கின்றன. இந்த முன்மொழிவு கள் அனைத்தையும் மத்திய அரசு விலக்கிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இவ்வாறு  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ந.நி.)

;