tamilnadu

img

பாஜகவுக்கு துணைபோன மற்றுமொரு முகநூல் அதிகாரி.... அங்கிதாஸை தொடர்ந்து ஷிவ்நாத் துக்ரால்...

புதுதில்லி:
‘முகநூல் இந்தியா’வின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பொதுக் கொள்கை இயக்குநராக இருப்பவர் அங்கிதாஸ். இவர் பாஜக-வின் மதவெறுப்புப் பிரச்சாரத்திற்கு உடந்தையாக இருந்ததை, அமெரிக்காவின் ‘வால் ட்டீரிட் ஜர்னல்’ பத்திரிகை அண்மையில் அம்பலப்படுத்தியது. இது இந்தியாவில் பரபரப்பையும் கிளப்பியது.இந்நிலையில், அங்கி தாஸ்மட்டுமன்றி ‘ஷிவ்நாத் துக்ரால்’என்ற முகநூல் நிறுவனத்தின்லாபியிஸ்ட்டும் (பரப்புரையாளர்) ஒருவரும், இந்துத்துவா சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற புதிய தகவலை ‘டைம்’பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தபாஜக சட்டமன்ற உறுப்பினர் ஷிலாதித்யா தேவ் பதிவிட்டிருந்த துவேஷக் கருத்தை நீக்குவதற்கு முகநூல் நிர்வாகம் முடிவுசெய்தபோது, அதற்கு எதிர்ப்புதெரிவித்து, முகநூல் நிர்வாகத்தின் அலுவல் ரீதியான கூட்டத்தையே புறக்கணித்து- ஷிவ் நாத் துக்ரால் வெளிநடப்பு செய்ததாக ‘டைம்’ பத்திரிகை (Time magazine) கூறியுள்ளது.கூட்டத்தில், பாஜக எம்எல்ஏமீதான குற்றச்சாட்டை திசைத்திருப்பும் வகையில், முஸ்லிம் ஒருவரால் இளம் பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் பட்ட விவகாரத்தை ஷிவ்நாத் கொண்டுவந்தார் என்றும், வங்கதேச முஸ்லிம்கள் இந்தியர்களைகுறிவைத்து செயல்படுகிறார் கள் என்று குற்றச்சாட்டு வைத்ததாகவும் ‘டைம்’ பத்திரிகை கூறியுள்ளது.அதுமட்டுமல்ல, ஷிவ்நாத் துக்ரால் எதிர்ப்பு காரணமாக அசாம்  பாஜக எம்எல்ஏ-வின் சர்ச்சைப் பதிவு, கலந்துரையாடலுக்குப் பிறகும் ஒரு ஆண்டாக தொடர்ந்து முகநூலிலேயே இருந்ததையும், ஒருகட்டத்தில், அந்தக் கருத்தை நீக்காமல் விட்டது தங்கள் தவறுதான் என்றுமுகநூல் நிறுவனமே ஒப்புக்கொண்டதையும் ‘டைம்’ பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்துத்துவா பேர்வழிகள் எந்த அளவிற்கு சமூக ஊடகங்களில் ஊடுருவியிருக்கிறார்கள் என்பது ‘வால் ட்டீரிட் ஜர்னல்’மற்றும் ‘டைம்’ பத்திரிகை கட்டுரைகள் முக்கியமான ஆதாரங்களாக மாறியிருக்கின்றன.

;